பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 155 குழுமியிருக்கும் கிராமத்தாரில் பலரும் இரவே நடந்து வந்திருப்பதால் ஆங்காங்கே படுத்து அயர்ந்திருக்கின்றனர். சிலர் கூடி நின்று வாயிலில் பீடி குடித்துக்கொண்டிருக்கின்றனர். எதிரே உள்ள வெற்றிலைப் பாக்குக்கடையில், எண்ணெய் வழியும் கறுத்த சருமம் பளபளக்க, புதிய மினுமினுப்புச் சட்டையும் வேட்டியும் சிவப்புத் துண்டும் கோலத்துக்குப் புதுமையாகவே நிற்க, சில இளைஞர்கள் வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். செவத்தையன் படியில் காலை ஊன்றிக்கொண்டு புட்டம் தரை தோயாமல் குந்தி இருந்து பீடி குடிக்கிறான். "மாமா, பனம் கட்டிட்டீங்களா?” பொன்னடியான் மரியாதையாகவே பலரையும் விசாரித்துக்கொண்டு வருகிறான். “என்னாயுசில ஒருதரம் மட்றாசி போய்ப் பாக்கணும். அதா வார." பற்கள் விழுந்து கண் குழிந்து சுருங்கிப்போன கைத்தடிக் கிழவர் ஒருவரின் ஆசை. “நாகப் பட்ணத்தக் காட்டிலும் பெரிசில்ல...?” "நாலு நாளக் கூலி போயிடும், நட்டந்தா. ஆனா இது போல சந்தர்ப்பம் வருமா?...” ஒருவரின் நியாயம். "நாப்பது ரூபா இப்ப பஸ் சார்ச்சிக்குக் குடுக்கிறமில்ல? அதையும் சேத்துக் கணக்குப் பாத்தா. கூடத் தானாவுது. ஆனா, அதுக்கெல்லாம் பாத்தா ஆவுமா?” "ஏது நாலு நா? இத இன்னிக்குப் புறப்படுறம்.நாளக்கி அமாசி. அமாசியன்னிக்கு வேல இல்ல. முடிச்சுட்டு ராத்திரி கிளம்பி மக்யா நா திரும்பிடப் போறம்.” "அட இதுக்குனு மட்றாசி போறம். சமுத்திரம், பீச், பெரிய மாடிக்கட்டிடம், லைட்டவுசு, இன்னும் என்னென்னவோ இருக்காமில்ல. எல்லாம் ஒரு நடை பார்க்கணுமில்ல?" 'அதெல்லாம் பாத்திட்டே தான பேரணில நடந்து போறம்?...” "நா எழுபத்தாறுல ஒருபேரணில கலந்திட்டேன். குளிக்க கொள்ள முடியாம வெயில் வேற, கட்டமாப் போச்சி.” "ஆமா உனக்கு மூணு நேரமும் குட்டயில எருமயப்போல கெடக்கணும்!” "ஏப்பா..? இன்னா விசயம். நம்ம தலவர் மவ ஆறுமுகம்