பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சேற்றில் மனிதர்கள் மவன. சொல்லிக்கிறாங்க...? ஆக்சன் ஏதும் எடுத்தாங்களா?..." 'ஒடிட்ட பெறகு என்னாத்த ஆக்சன் எடுக்கறது?” "அப்ப மைத்த பேருக்கும்.அதே ரூலுதான? பொட்ட புள்ளகளுக்கு ரொம்ப நீளச்சி குடுக்கக் கூடாது. கண்டிசன்னா..." "ஆமா! பொட்ட புள்ளைங்க இல்லாம நீங்க கிளிச்சிருவீங்க!” கட்டைக் குரல் அங்கே ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு பாய்கிறது. "ஆரு? மாதர் சங்கத்து அம்மாளா? ஏம்மா? பேரணிக்கு உங்கsட்டுக்காரன் வரல?” "அவரும் வந்தா எப்பிடி? நாந்தான் வாரே...' "இந்தம்மாதா அஞ்சாம்பிளக்கி சமமாச்சே!...” "ஆமாய்யா. நானும் பாத்திட்டே வாரேன். இத்தினி பேரு வெள்ளயும் சள்ளயுமா உக்காந்திருக்கிறீங்க. உனிமையா, மாதரை மதிக்கிறவங்களா இருந்தா, நீங்க ஒரு பத்துப் பொண்டுவளன் னாலும் கொண்டாரனுமில்ல? நாம் போயி மல்லுக்கு நின்னு அத, பிரேமாப் பொண்ணையும் சங்கிலியம்மாவையும் கூட்டிட்டு வந்தேன், எல்லாம் பேசுவீங்க!” "அம்மா, உங்கிட்ட வாய்க் குடுக்க முடியுமா?...” "இத தலவர் வாராரு அட என்னங்க, நீங்ககூட அக்காளக் கூட்டிட்டு வரல!...” சம்முகம் சிரிக்கிறார். முழுச்சிவப்புத் தேங்காய்ப் பூத்துவாலை சட்டைக்குமேல் விளங்க, கையில் வயர் பையில் துண்டு, வேட்டி, இட்லிப் பொட்டலம் சகிதம் பேசாமலே தங்கசாமி பண வசூல் செய்யும் மூலைக்குச் செல்கிறார். "பாத்தீங்கல்ல? பேசாமலே போறாரு?. பொண்டுவளுக்குத் தயிரியம் வாரணும்னு மேடையில பேக்வாங்க அல்லாரும்! ஆனா வூட்டுக்குள்ள போனா, கதையே வேற. இத களப்பாள் காரரு வாராரு இந்தத் தோழரும் கம்முனு தா வாராரு அம்பது அறுபது பேரு வார பக்கத்திலே மூணே பொண்டுவ! நோட்டீசு குடுத்து படிச்சிப் படிச்சி சொல்லிட்டு வந்தே." 'அட ஏம்மா லவலவன்னு கத்திட்டே இருக்கிற? பொண்டுவ அல்லாரும் உன்னப்போல இருப்பாங்களா? வூடு வாச, புள்ள குட்டின்னு இருக்கில்ல?” குப்பன் சாம்பார் தொளதொளத்த சட்டையும் சிவப்புக்