பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 157 கரை வேட்டியுமாக நெருங்கி நின்று கிட்டம்மாளுக்குப் பதில் கூறுகிறான். "ஆமா, நாம் பேசுனா லவலவன்னு கத்தறது! நீங்க வார பணத்தக் கள்ளுக்கடயில குடுத்திட்டு.” "ஏங்க? வண்டி என்னமோ பத்து மணிக்கே வந்திடும்னாங்க நான் வேகமா ஒடியாரேன்.” பேச்சை மாற்றுகிறான் ஒருவன் சாதுரியமாக. "நாங்க குப்புமங்கலத்திலேந்து நடந்தே வாரம். நீங்க எந்துரு?...” "நாங்க கண்ணங்கோயில். ராவே இங்க வந்திட்டம். காலம ஏழு மணிக்கெல்லாம் வண்டிக்கு ரெடியா இருக்கணும்னு இத. இந்தத் தோழர்தா கண்டிசனாச் சொன்னாரு சார்ச்சுக் குடுத்திட்டுப் போறதுன்னா பதினேளு ரூபா டிக்கெட்டே ஆயிப்போவுதாம். இப்ப நமுக்கு ஒருவேள சாப்பாடு, நாஷ்தா இதுல அடக்கம்.” வடிவு அலுவலகத்துக்கு வெளியே நின்று ஏ க்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதிய சட்டையும் கிராப் வாரலும் முகச்சவரமுமாகப் பளிச்சென்று சிவப்புத் துண்டு தெரிய பல இளைஞர்கள் பேரணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நாற்பது ரூபாய் கொடுத்துக்கொண்டு அவனால் போக இயலாது. "நீங்கதா முன்னியும் போயிருக்கீங்க. நாந்தா பட்னம் பாத்ததில்ல. நாம் போறன் பேரணிக்கு!...” என்று கூறிப் பார்த்தான். "கெடடா, கம்மா, அவுங்க குப்பன் சாம்பாருன்னு ஆபீசில பொறுக்கி எடுத் திட்டாங்க. நா இன்னும் எத்தினி நா இருக்கப்போறேன்? செறுபய, உனக்கு எத்தினியோ சந்தர்ப்பம் வரும், போவலாம். அவங்க இது செரியில்லன்னா டில்லில தலநகரில போய் பேரணி நடத்துறதா இருக்காங்க. அப்ப உன்னையே அனுப்பச் சொல்றண்டா?” என்று அடித்து விட்டான் அப்பன். முதலாளியிடம் குழைந்து கேட்டுப் பார்த்தான். "ஒரு வூட்டிலேந்து ரெண்டு பேரும் வர்றதுக்கில்லடா. மேலும் எல்லாரும் போயிட்டா பங்கில மடைபாத்து வுடுறது ஆரு?...” . சம்முகம் அவன் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை. இருந்தாலும்ஆசை அவனைத் துரத்தி வந்திருக்கிறது.