பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 1.59 .." "இல்ல முதலாளி..." சிரிப்பு வந்து விடுகிறது. "முதலாளின்னு கூப்பிடலன்னா எப்பிடிங்க கூப்பிடுறது?” தோழரே என்று சொல்லிக்கொடுக்க சம்முகத்துக்கும் நா எழவில்லை. "அண்னேன்னு கூப்பிடுறது!” வடிவுக்குச் சிரிப்பு கொள்ளாமல் வழிகிறது. "அண்னேன்னு எப்பிடிங்க கூப்பிடுறது? அண்ணேன்னு அளச்சா, அண்ணன் மவள ஆருன்னாலும் கட்டுவாங்களா? மாமான்னு கூப்பிடுறேன் முதலாளி?” சம்முகத்துக்கு சிரிப்புத்தான் வருகிறது. அவனுடைய கபடமற்ற குழந்தை உள்ளம் கோபிக்கும்படியாக இல்லை. "அப்ப, இப்ப நான் சொல்றதைக் கேளு! வர பஸ்ஸைப் புடிச்சி ஊருக்குப் போய் வேலையப்பாரு! பொண்ணக் கட்டணும்னா, பொறுப்போட வேலையப் பாக்கனும், நடக்கணும்; உன்ன நம்பித்தா நா எல்லாம் விட்டுப் போறேன்!” "எனக்குப் பட்டணம் பாக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு மாமா!' "பாக்கலாம்டா கலியாணம் ஆனதும் அனிமூன் அனுப்பி வைக்கிறேன். இப்ப நீ ஊருக்குப் போ!' திரும்பி அவன் பஸ்ஸில் ஏறிச்செல்லும்வரை பார்த்த பின்னரே சம்முகம் அலுவலகத்துள் செல்கிறார். வடிவுக்கு ஒரு ஆறுதல், அவன் மாமா என்று அழைத்து மனதில் உள்ளதை வெளியிட்டு விட்டான். அவர் கோபிக்க வில்லை. آئی கலியாணம் கட்டி, அவனைப் பட்டனத்துக்கு அனுப்பி வைப்பார்! அங்கு மச்சான், படித்து வேலை செய்யும் மச்சான், பாப்பாரப் பெண்ணைக் கட்டி இருக்கும் மச்சான் வீட்டில் தங்குவார்கள். அவனும் நாகரிகமாக நடப்பான். அம்சுவுடன் பட்டணத்தில் கைகோத்து உலவுவான்! மாடி பஸ்ஸில், எலக்ட்ரிக் வண்டியில் போவார்கள். குளுகுளுவென்று சினிமாக்கொட்டகையில் உட்கார்ந்து சினிமா பார்ப்பார்கள். என்ன பேரணி ஒரு இடமும் பார்க்க (LDL) ILI TI 9,1.