பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சேற்றில் மனிதர்கள் போய்விட்டு உடனே வண்டியேறித் திரும்பி விட வேண்டும். போகாததும் நல்லது. மாமா. அம்சுவிடம் ஒடிப்போய் இதைச் சொல்லப் பரபரக்கிறது LD GTJTLD. பஸ்ளலின் வேகம் போதவில்லை. 16 "குடிப்பதற்கு நீர் வேண்டும்! குடியிருக்க இடம் வேண்டும்! புதைப்பதற்கு சுடுகாடு வேண்டும்!” ஆயிரம் பதினாயிரமாக இந்தக் கோஷம் வானைச் சென்று முட்டுகிறது. சம் முகம் இதற்கு முன் ԼI GՆ) பேரணிகளில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தப் பேரணியில் அவருடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே அதிகமாகத் தெரிகின்றனர். முதன்முதலில் அவர்கள் கிராமத்திலிருந்து ஆட்சியாளரின் துணையோடு அவர்களை அடக்க முயன்ற அமைப்பை எதிர்த்துப் பத்து மைல் தொலைவு ஆண்களும் பெண்களுமாக டவுனுக்குப் பேரணி வந்த நாள் அவருக்கு நினைவு இருக்கிறது. அப்போது அரசியல் விடுதலை பெற்றிராத நாட்டின் குடிமக்கள் அவர்கள். அவருக்குப் பதினெட்டு வயசு, மீசை அரும்பும்கிளர்ச்சி மிகுந்த பருவம். 'அடிமையாக இருப்பதுதான் நம் விதி' என்று அழுந்திக்கிடந்த மக்களை ஊரூராகச் சென்று, "தாத்தா வாங்க, மாமா வாங்க, மாமி நீங்களும் வாங்க, அண்ணே, அக்கா எல்லாரும் கலந்துக்குங்க!” என்று உற்சாகத்துடன் திரட்டினான். எந்த இருட்டானாலும் பகையானாலும் உயிர் அச்சம் உறைத்ததில்லை. வாலிபத் தோழர்களின் அணியே வெளியிருந்து வந்த தலைவர்களைப் பூரிக்கச் செய்திருந்தது அந்நாளில், "நாளை எண்ணி வட்டி வாங்கும் நமன்களை ஒழிப்போம்! "உழுபவனுக்கு உரிய பங்கை அமுல் படுத்துங்கள்! "புரட்சி ஒங்குக... இன்குலாப் ஜிந்தாபாத்!" என்றெல்லாம் இவர்கள் முறை வைத்துக் கோஷமிட்டுக் கொண்டு வெள்ளமாய்ப் பெருகி வந்தார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது' என்றவகையில் அந்த எழுச்சி அப்போது பொங்கி