பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 161 வந்திருந்தது. இப்போது அவருக்குக் கோஷமிடவே வாய் அவ்வாறெழவில்லை. அப்போதிருந்த நம்பிக்கை ஒளி இப்போது குறைந்துவிட்டது. "அமுல்படுத்து! அமுல்படுத்து!" "சட்டக் கூலியை அமுல் படுத்து!" சட்டம் போட அப்போது போராட்டம்; இப்போது சட்டம்போட்டும் அமுல்படுத்தப் போராட்டம்! தங்கள் அணியில் மூன்றே மூன்று பெண்களில் கிட்டம்மாள் கட்டிக்கொண்ட தொண்டையைக் கிழித்துக்கொண்டு கூவுகிறாள். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.” "தாக்காதே, தாக்காதே! அரிசன மக்களைத் தாக்காதே!" சுதந்திரம் வந்து முப்பத்துமூன்று ஆண்டுகளாகியும் அரிசனங்களுக்குத் தனித் தொகுதிகள், தனி அமைச்சகங்கள் என்று சிறப்புக் கண்காணிப்பு என்று ஆடம்பரம் காட்டியிருப்பதுதான் பெரிதாக இருக்கிறது. வெயில் மிக உக்கிரமாகத் தலையில் படிந்து, நெற்றியில் வியர்வை வழிகிறது. துண்டைத் தலையில் போட்டுக்கொள்கிறார் “விவசாயத் தொழிலாளிகளுக்கு ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வா!' "பென்ஷன் வழங்கு! பென்ஷன் வழங்கு!” "கூலியோடு வார விடுமுறை, மருத்துவ வசதி எல்லாம் வழங்கு!” o i சாலையோரங்களில் கடைகளில் வணிக நிறுவனங்களில் உள்ள மனிதர்கள், நடைபாதைகளில் நடப்பவர்கள் இதைச் சிறப்பாகக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேப்பியர் பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடர்ந்து வருகையில் போக்குவரத்து ஊர்திகளுக்குத்தான் பாதிப்பாக இருக்கிறது. “என்ன ஊர்வலம்?. விலைவாசியாக இருக்கும்! வேறென்ன? தினம் ஒரு பேரணி ஊர்வலம்!" "இல்லப்பா விவசாயத் தொழிலாளர் சங்கம்!” "அது பச்சைக் கொடியில்ல? இது சிவப்புக் கொடியாக இருக்கு?” "எல்லாத் தொழிலாளர் சங்கத்திலும் எல்லா வர்ணக் சே -11