பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சேற்றில் மனிதர்கள் "ஐயிரு பொண்ணக் கட்டிருக்கே...” "ஆமா...” "அவுரு எட்டு மணிக்கு மேலில்ல வருவாரு?. வூட்ட அது வந்திருக்குதோ இன்னாமோ, போயி பாரு நயினா!' இந்தக் கோட்டைக்குள் எவன் வந்தாலும் போனாலும் எனக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும் என்பது போலிருக்கிறது, அவன் அனுமதி வழங்கும் பேச்சு! அவனுக்கு வேலையான பின் அவர் ஒரே ஒருமுறை தான் சென்னையில் அவனை வந்து பார்த்திருக்கிறார். அப்போது சங்கக் கூட்டத்துக்காக வந்தார். அவனைப் பத்து நிமிசம் பார்க்க முடிந்தது. புதிய மெருகும் களையுமாக இருந்தான். அவருக்குப் பெருமையாக இருந்தது. பி.ஏ.யில் ஒரு பகுதி அவன் தேறியிருக்கவில்லை. "முடிஞ்சா அத்தை முடிச்சிடுரா!" என்றார். வேலை செய்து சம்பாதிப்பவன் என்று பணம் எதுவும் அவனாகவும் கொடுக்கவில்லை. இவருக்கும் கேட்கக் கூச்சமாக இருந்தது. பையனானாலும் அவன் தோளுக்குமேல் வளர்ந்து படித்துவிட்டதால் சட்டென்று அந்நியமாகிவிட்டாற்போன்ற பாவம் இவருள் ஓங்கியிருந்ததுதான் காரணம். ஆனால் அவன் இவர் ஊர் திரும்புகையில் ஒட்டலுக்குக் கூட்டிச் சென்று உபசாரம் செய்து, பிஸ்கோத்து கேக்கும் கொடி முந்திரிப் பழமும், அம்சுவுக்கும் காந்திக்கும், கழுத்து மணி மாலையும், முடியில் வைத்துக்கொள்ளும்அலங்கார ஊசிகளும் வாங்கிக்கொடுத்தான். அதைத் தொடர்ந்து வந்ததுதான் திருமணச் செய்தி. தாம் அங்கே சென்றிருக்கையில் அவன் அவளைச் சந்திக்கச் செய்து தம்மிடம் கேட்டிருக்கவில்லை என்ற மரியாதைக் குறைவு அவருள் புழுவாகக் குடையாமலில்லை. நான் வேறாகிவிட்டவன். என் வாழ்க்கைப் பற்றிய முடிவுகளை நானே எடுப்பேன் என்று சொல்வது போலிருந்தது. பிறகு அவன் ஒரு மாசத்துக்கு முன்பு திடுமென்று புறப்பட்டு வந்து சண்டைக் கொடி ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறான். இவர் முன்னதாகக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். அவன் வீட்டுக்கு முன்னதாகவே வந்திருக்கலாம்; அல்லது வந்துவிடுவான். இவர் கதவு எண்ணைப் பார்த்துக் கொண்டே வந்து தட்டுகிறார். அடுத்த பகுதியில் ஒரு பெண் வாயிற் படியில் டிரான்ஸிஸ்டரைப் பெரிதாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்