பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 1.65 கிறாள். அதிலிருந்து வரும் பாட்டு ஒரே கத்தலாக இருக்கிறது. தனது தட்டல் உள்ளே இருக்கும் மருமகளுக்குச் செவியில் விழுமா என்ற ஐயத்துடன் சற்றே ரேடியாவை நிறுத்து என்று சொல்லும் பாவனையில் பார்க்கிறார். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தாமல் வெளியே கைபிடிச் சுவரில் வைத்துவிட்டுச் சாய்ந்து நிற்கிறாள். சினிமாப்பாட்டு புரியத் தொடங்குகிறது. விரசமான சொற்களில் காதல் பாட்டு. அவர் பலமாக அழுத்திக் குத்துவதுபோல் கதவைத் தட்டுகிறார். கதவு திறக்கப்படவில்லை. ஆனால் உள்ளிருந்து குரல் வருகிறது. 'ஆரு?” "நா. சம்முகம், ஊரிலேந்து வந்திருக்கிறேன். கிளியந்துறை." கதவு மறுகணம் தாழ்ப்பாள் விடுபட்டுத் திறந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார். பொய்யாகிறது. "...அவுரு இன்னிக்கு வர நேரமாகும். பிறகு வாங்க?" அவருக்கு நா ஈரம் வற்றி உலர்ந்து போகிறது. "நா. கோபுவின் அப்பாதான். கதவு திறங்க...” "ஆராயிருந்தாலும் அப்புறம் வாங்க...” மனதோடு ஒரு வசை தெறித்து விழுகிறது. நல்லவேளையாக நாவில் குதிக்கவில்லை. விழுங்கிக்கொள்கிறார். உடல் முழுவதும் ஒரு சூடு பரவிக் குழம்புகிறது. "ஆராயிருந்தாலும். அப்புறம் வாங்க?" அவர் பெரிதாகக் கருதி, பெருமை பொங்க, தன் வியர்வையைத் தேய்த்து அவனுடைய ஏற்றம் கண்டார். தாம் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தும் இவ்வாறு அவமானம் செய்திருக்கிறான். அந்தப் பெண் என்ன, படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? வந்தவர், புருஷனின் தகப்பன் என்பதை அறிவித்த பின்னரும் கதவு திறந்து பார்த்துப் பேச மாட்டாளா? வெளியில் டிரான்சிஸ்டரை வைத்துக்கொண்டு நோட்டம் பார்க்கும் பெண் ஒரு சொல் உதிர்க்கவில்லை. அவள் மீதும் கோபம் வருகிறது. பொட்டைச் சிறுக்கிகள்! பல்லை இளித்து மயக்கி, பெற்றவர்கள் பாசத்தையே