பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சேற்றில் மனிதர்கள் மானங்கெடனுமா? அப்புறமும் இப்புறமும் வானாம். நீ இப்ப பணத்தைக் குடு. நான் போறேன்.” 'ஏது பணம்?” "என்னடா ஏதுன்னு கேக்கிற? உங்கம்மாட்ட குழயடிச்சி வாங்கிட்டுப் போனியே அம்பது ரூபா?...” "அம்மாட்டியா? நானா? அம்பது ரூபா நா வாங்கிட்டு வந்தனா? அவங்க கூலிப்பணம் குடுத்தாங்க வடிவுகிட்ட அப்பவே குடுத்திட்டேன். அவன் கண்டமானிக்கும் பேசினான். அதனாலதா நீங்க வரவரைக்கும்கூட நிக்காம வந்தேன். இப்ப நீங்க இப்படி ஒரு பழியைப் போடுறீங்க? சீச்சீ!...” 'அட... பாவி, உங்கம்மா, பெத்த தாயப் பொய் பேசுறவளாக்கிட்டியே..." “என்னப்பா, கொஞ்சம்கூட ஒரு டீஸன் எலி இல்லாம இங்க நின்னிட்டுக் கத்துறிங்க? நா வாரேன்! வீட்ல வந்து பேசிக்கலாம், போங்க!” அவன் விர்ரென்று உள்ளே சென்றுவிடுகிறான். எரிமலை புகையாகக் குழம்புகிறது; கண்கள் சிவக்கின்றன. மிகப் பெரிய சென்னைப் பட்டினமும் அதன் இயக்கமும்அவருடைய உணர்வைவிட்டு நழுவிப் போகின்றன. சொந்த மகனே இப்படிப் போனானே? தன் மகன் காலில் சேறுபடலாகாது, பிறந்த குடியை உயர்த்திப் பெருமை சேர்ப்பான் என்று கனவு கண்டார். ஈரமண் ஒட்டக்கூடாது என்று நினைத்ததற்கு ஈரத்தையே துடைத்துவிட்டார்கள். பெற்றவனும் பெற்றவளும் அழுக்கென்று துடைத்து விட்டார்கள். உணர்ச்சியை விழுங்கிக்கொண்டு துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு நடக்கிறார். 17 கடந்த சில நாட்களாகத் தாயும் தகப்பனும் ஆக்ரோசமுடைய இரு பூனைகள்போல் சண்டைபோட்டுக் கொள்வதாக அம்சு வுக்குத் தோன்றுகிறது. மாறாக பாட்டியும்பாட்டனும் சீண்டிக்கொள்ளும் பேச்சும் பிணக்கும் ஒய்ந்துவிட்டன. மகள் ஒடிப்போனது, தாயும் தகப்பனுக்குமன்றி பாட்டிக்கும் ஒர் அடிதான். ஏன், பாட்டன் கள்ளுக்கடைக்குச்