பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O சேற்றில் மனிதர்கள் சமையலடுக்கின் கீழ் சென்று உட்கார்ந்து கொள்கிறான். சற்றைக்கெல்லாம், வாயில் பல் குச்சியுடன் ஆற்றுக்கரை மேட்டில் நிற்கையில் நாகுவின் ஊளையொலி மீண்டும் கேட்கிறது. நடுவிட்டில் வந்து அவன் அசுத்தம் செய்திருக்கிறான். லட்சுமி அவனை இழுத்து வருவதும்அவன் ஊளையிடுவதுமாக ஒரு அரங்கம் விரிந்திருக்கிறது. சம்முகம் புளிய மரத்திலிருந்து ஒரு நீண்ட பிரம்பை ஒடித்து வருகிறார். பளார் பளாரென்று முதுகிலும் காலிலும் பேய் பிடித்தாற்போல் வீறுகிறார். நாகு ஐயோ ஐயோ என்று பயங்கரமாக ஊளையிட, லட்சுமி கத்த, தெருவில் கூட்டம் கூடிவிடுகிறது. "பாவம், அந்தப் பயலுக்கு அமாசி வேந்திடிச்சின்னா இப்பிடியாவுது...!" என்று சொல்லிக்கொண்டு போகின்றனர். "உங்களுக்கு என்ன இன்னிக்குப் பேயி புடிச்சிருக்கா..." இரத்தம் கசியும் பையனின் காலைப்பார்த்து முதுகைப் பார்த்துக் கண்ணிர் தளும்ப விம்முகிறாள் லட்சுமி. 'அம்மா... அம்மா... அம்மா...” வார்த்தை குழம்பும் அந்தக் குழந்தையைக் கண்களைத் துடைத்துச் சமாதானம் செய்து ஒரமாக அழைத்துச் செல்கிறாள். “காபி. காபிம்மா கா...” 'காபிதான? வச்சித்தாரேன். நீ ஏன் அழுவுற? நீ கத்தினதாலதான அப்பா அடிச்சாரு?...” சம்முகம் புளியம் விளாறை மேட்டிலிருந்து ஆற்றில் வீசி எறிகிறார். மனசில் ஒட்டிக்கொண்ட சாணியை வீசி எறிந்து கழுவவேண்டும் போல் ஒர் அருவருப்பு தோன்றுகிறது. அக்கரை எல்லாம் பச்சைப் பாயலாகக் கண்களில் அமுதத்தைத் தடவுகிறது. புரட்டாசிச் சூரியன் தகத்தகாயமாக அந்தப் பச்சையின் மூலகாரணம் நானே என்று வீரியக் கதிர்களைப் பரப்புகிறான். இந்த மனிதர்களெல்லாம் அற்பம் என்று சொல்லுகிறானோ? தனது ஏலாமை விசுவரூபமாக முட்ட, அழவேண்டும் போலிருக்கிறது. லட்சுமி. அவளை அமுதமென அனைத்துச் சுகித்திருக்கிறார். அவர்களை அறியாமைச் சேற்றிலிருந்து கை துரக்கிவிட