பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 171 உயிரைப் புல்லாக மதித்து அங்கே வந்த தலைவர்களை, வேட்டை நாய்களைப்போல் போலீசார் துரத்திப் பிடிக்க அலைந்தபோது, அவர்களுக்காக இவன் காவலாய் நின்றபோது, ஊழியம் செய்தபோது, இடையில் இவள் எத்துணை சக்தியூட்டுபவளாக இருந்தாள்? நாட்டாண்மைக் காரரின் மகளாக, நெஞ்சில் ஆசையைச் சுமந்த காதலியாக இருந்து, எந்தநேரத்திலும் புகலி டம் தேடி வந்தவருக்குத் தம்மால் சோறும் நீருமளிக்க முடியும் என்ற துணிவையும் நம்பிக்கையையும் அளித்திருந்தாள். அந்தக் குடிசையில் ராஜன் என்ற கல்லூரி மாணவன் தங்கியிருந்திருக்கிறான். கொள்கைப் பாடங்கள் புகட்டுவதில் மன்னன். அநேகமாகச் சம்முகத்துக்குச் சம வயசுக்காரனாக இருப்பான். இல்லையேல் ஒன்றிரண்டு கூட இருந்திருக்கும். பால் வடியும் முகம். அந்தக் குடிசைக்குள் ஒருமாதம்போல் தலைமறைவாக இருந்தான். நாளெல்லாம் படிப்பான்; எழுதுவான். சம்முகம் அவ்வப்போது வெளிச்செய்தி கொண்டுவருவான். எழுதியதை எடுத்துக்கொண்டு செல்வான்; இரவு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வான். நாட்டாண்மையின் மகள் லட்சுமி அப்போதெல்லாம் சோறு கொண்டுவந்து போடும்போது ராஜனுடன் சிரித்துப் பேசுவதைக் காண்பான். இவன் வெளியேயிருந்து வந்து போகும் ஆள். அவனோ தலைவர் என்ற ஆழ்ந்த மதிப்புக்குரியவன். அப்போதெல்லாம் கபடமாகவோ, சந்தேகத்துக்குரிய தாகவோ ஒரிழைகsடச் சிலும்பல் தெரிந்ததில்லை. பெரிய பண்ணையின் செல்வாக்கை ஒடுக்கவே சின்னப்பண்ணை சுந்தரமூர்த்தி இந்தப் புரட்சிக்காரரை ஆதரித்தார். லட்சுமியின் அப்பன் பெரிய பண்ணையின் கீழிருந்த ஆள். ஆனாலும் உள்ளுற இவர்கள் பக்கமிருந்து வெளிப்படையாக விரோதித்துக்கொள்ளாமல் அஞ்சிக் கொண்டிருந்தான். "எலே சம்முவம்? வெதக் கோட்டயில எலி இருக்குதாம். தீவட்டிக்காரன் புகைபோட வாரானாம்!” இந்தச் செய்தியை லட்சுமிதான் கொண்டு சென்றாள். தப்பிச்சென்ற அவனை மறைவானபடியே கடத்திக்கொண்டு வாய்க்கால் மதகடியில் படுக்கவைத்ததும், காவல்துறையினர் மேலே சென்றதும் இப்போதுபோல் சம்முகத்துக்கு நினைவுக்கு