பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 173 இருந்தது. தாய் உள்ளே உட்கார்த்திவைத்து சோறு போட்டாள். எங்கோ அக்கம் பக்கமிருந்து சோறு வாங்கித்தான் வந்திருந்தாள். அந்த நேரத்தில் லட்சுமி அவனிடம் சொன்ன சொற்கள். "இங்க. எல்லாரும். நீங்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. நான் உங்ககிட்ட புனிதம்னு வேசம்போட இஸ்டப்படல, போலீசுக்காரப் பாவி அநியாயம் பண்ணிட்டான். எதுனாலும் தின்னு கரச்சிடலாம்னு அம்மா சொல்லிச்சி, கலியாணம் ஆகுமுன்ன வாணான்டின்னு. நா உங்கள ஒருக்க உசிரோடு பாத்துச் சொல்லிவிட்டு, ஆறு குளம் எதிலன்னாலும்." அவள் மேலே பேசவிடாதபடி வாயைப் பொத்தினான். 'போவட்டும். எல்லாரும் நினைக்கிறாப்பல அது எம்புள்ள யாவே இருக்கட்டும். நீ இல்லேன்னா எனக்கு ■ بير" ஒண்ணுமேயில்ல. ஆறு குளமெல்லாம் பேசாத, லட்சுமி!" என்றான். உடனே சுந்தரமூர்த்தி முன்னிலையில்தான் அவர்கள் கல்யாணம் நடந்தது. விசுவநாதனும்கூடக் கல்யாணத்துக்கு வாழ்த்துக் கூறினார். பிறகுதான் அவர் சிறைக்குச் சென்றதும் சிடட. வழக்கு, கோர்ட்டு, சிறை என்று கல்யாணம் செய்த சில ஆண்டுகள் எப்படியோ கழிந்தன. குழந்தை பிறந்து ஒரு வயசு வரையிலும் எதையும் நுட்பமாக அவர்கள் கவனிக்கவில்லை. மரத்தடியில் ஏனையில் போட்டுவிட்டு இவர்கள் வேலைக்குப் போவார்கள். பசித்தழும்போது, மற்ற குழந்தைகள் குட்டைத் தண்ணிரையோ காவாய்த்தண்ணிரையோகூட ஊற்றுவார்கள். கோபால் பிறந்து அவன் பேச, நடக்க ஆரம்பித்த பின்னரும், இதற்குப் பேச்சு வரவில்லை. எல்லாம் குழம்பிற்று. காற்று கருப்பு சேட்டை என்று பெண்கள் அப்போது ஊர்க்கட்டை மீறி எங்கோ சென்று பூசாரி வைத்தியம் செய்தார்கள். பயனில்லை. பையனின் வளர்ச்சியும் ஏடாகூடமாக இருந்தது. காந்தியும் அம்சுவும் பிறந்த பின் இரண்டு தடவைகள் கருவுற்றாள். இரண்டும் நிற்கவில்லை. அப்போதுதான் சின்னப்பண்ணை வீட்டு அம்மாள் சொல்லி, அவள் புதுக்குடி ஆஸ்பத்திரிக்குச் சென்று பிள்ளை வேண்டாம் என்று சிகிச்சை செய்து