பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 175 "என்ன மாமா, ஐயமாரப் போல காலங்காத்தால குளிக்க எறங்கிட்டிய?” "சும்மாதா, நின்னே பல்லு விளக்கிட்டு குளிக்கலாம்போல இருந்திச்சி. களையெடுக்க ஆளனுப்பிச்சிட்டியா?” "ஐயா கூட்டிப் போயிருக்காரு. நா மேச்சாரிப் பங்கு 'மடை பாத்திட்டு வார வூட்ட அந்தப்பய வந்திருக்கிறா, மாமா." அவன் தயங்கித் தலையைச் சொறிகிறான். "யாரு...?” ■ "நீங்க வாங்க, சொல்றேன்." சம்முகம் கோவணத்துடன் படியேறி வேட்டியைக் கசக்கிப் பிழிகிறார். ஈர உடல் மறைய விரித்துப் பிடித்துக்கொண்டு வருகிறார். "ஐயனாரு கொளத்துலேந்து அவெ வந்திருக்கிறான்.” "யாரு, சோலையா? பஞ்சமி புருசனா?” "ஆமா. ஆயி செத்துப் போச்சி. வூட்ட கஞ்சிகாச்ச நாதியில்ல. தம்பிகாரன் மாமியா வூட்டோட போயிச் சேந்திட்டா. அப்ப என்னியோ அல்லாம் சொன் னானுவ தெரியாம செஞ்சிட்டேன்னு கூட்டிட்டுப் போவ வந்து நிக்கிறா..." "இப்ப புள்ள அவனிதுதாமா...?” வடிவுக்குக் கடைக் கோடியில் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. "நீங்க வந்து சொல்லுங்க மாமா...” வீட்டினுள் சத்தத்தையே காணவில்லை. வேறு வேட்டி உடுத்து மேலே துண்டைப் போர்த்துக்கொண்டு நெற்றியில் துளி திருநீற்றைப் பூசியவராக வடிவுடன் நடக்கிறார். இப்போது குடிசைகள் அக்கரையில் இருக்கின்றன. எல்லாம் வேரூன்றும் ஆதாரம் இல்லாத வெற்றுக் கூரையும் கீற்றுத் தடுப்புக்களுமாக இருக்கின்றன. இவனுடைய வீட்டின் வாயிலில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சோலை பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருப்பது கண்களில் படுகிறது. முடியில் நிறைய எண்ணெய் அப்பிக் கொண்டு சிகப்புச் சட்டை போட்டிருக்கிறான்! எட்ட இருந்து பார்க்கும் இந்தக் காட்சி, சம்முகத்துக்கு நெஞ்சில் அடிப்பது போலிருக்கிறது. ஒரு பெண்ணை உயர்த்துகிற தாய்மைக்கு மதிப்புக் கொடுப்பது அந்தப் பிள்ளையை மனிதப்பிள்ளை என்று நினைப்பதுதானோ?