பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சேற்றில் மனிதர்கள் o இவர்களைக் கண்டதும் அவன் அவசர அவசரமாக எழுந்திருக்கிறான். “வணக்கமுங்க...” "உக்காந்துக்க, நீயும்.” "இருக்கட்டும்; நீங்க உக்காருங்க...” "சுடுகாட்டுக்கு வழி வேணும்னு கோரிக்கை வச்சிருக்கு. போரிங்குழாய் போடறதுக்கும் நெருக்கிட்டிருக்கிறோம். இந்தக் கோடைக்குக் கஷ்டம் இருக்காது.” "தோப்போட பாதையையே குறுக்கா கொண்டாந்து ரோட்டில சேத்திடலான்னு முன்னியே வந்து பாத்து எல்லாம் எழுதிட்டுப் போயிருக்காரு, கணக்கப்பிள்ளை. டேப்பெல்லாம் வச்சி அளந்தாவ. அதுக்குள்ள செட்டியாரு நெலத்த வித்துப் போட்டாரு. எல்லாக் கோளாறும் வந்திரிச்சி." "நெருக்கிட்டே இருப்போம். இப்பு என்ன, பெஞ்சாதிய கூட்டிப் போகவா வந்திருக்கிற?” அவன் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். "என்னமோ அன்னிக்குப் பொல்லாத நேரம். என்னமோ நடந்துபோச்சி. இப்ப, அது வந்தா கூட்டிட்டுப் போவலான்னு. புருசன் பொஞ்சாதின்னு ஒரு கட்டுக்குள்ள ஆன பெறகு. படலக்கி அந்தால பூசினிக்கா வுளுந்தாக்கூட எடுத்துக்கிறம். புள்ள, பொஞ்சாதிய வெலக்கி வுடுறது செரியில்லன்னு தோணிச்சி.” குழந்தையை அவன் இன்னும் வைத்துக் கொண்டிருக் கிறான். அது சிவப்பு சட்டையின் பித்தானைப்பற்றி இழுக்கிறது. துருதுருவென்று கைகளையும் கால்களையும் அசைக்கிறது. "...சும்மாருடா. பயலே.” என்று கொஞ்சிக் கடிகிறான். "பஞ்சமி! இங்க வா பொண்ணு!” சம்முகத்தின் குரலுக்காகவே காத்திருந்தாற்போல் அவள் குடில் வாயிலில் வந்து நிற்கிறாள். "என்ன சொல்லுற1. உனக்கு விருப்பம் எப்படி இருக்கு?" "இங்க ஏன் கெடக்கனும்?. அது சொன்னாப்பல. அப்ப ஆரு பேச்சயோ கேட்டுட்டுப் பேசிடிச்சி. ஊருல கண்டதும் பேசுறாங்க...” "அப்ப உனக்குப் புருசன் மேல கோவமில்ல?.” சம்முகத்துக்குச் சிரிப்பு வருகிறது. ஆனால் அவள்