பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சேற்றில் மனிதர்கள் சட்டமும் கண்துடைப்புக்களாக விளங்கும் போதும் மண்ணை வெறுத்துவிட முடியுமா? * குழந்தையை முத்தமிட்டுக்கொண்டு ஒரு முறுக்குத் துண்டை விண்டு கொடுக்கிறார். மனம் லேசாக இருக்கிறது.

    • . 18

காருக்குள் அமர்ந்திருப்பவர் யாரென்று இனம் கண்டுகொள்ள முடியாது. கறுப்பு அடித்த கண்ணாடி பின்னால் பட்டுத்திரை. "இன்னிக்கு நாம திருவாரூர் போலாமா காந்தி? புதுப்படம் வந்திருக்கு." அவனை அப்படியே கழுத்தைப் பிடித்துவிடவேண்டும் போல் இருக்கிறது. கபடமறியாது, உலகை எட்டி அளக்கக் கால்வைக்கத் துடித்த அன்றைய காந்தி இல்லை. ஆழந்தெரியாத சகதியில் முட்புதரில் சிக்கிக் கொண்டிருக்கும் மலர் அவள். வடிவு பாம்புக்கு அஞ்சாமல் முள்ளுக்கும் கூசாமல் தாழைக்குலை கொண்டு வருவான். உடையார் வீட்டில் சரோஜாவுக்கு அந்தப் பூவில் உயிர். என்ன வாசம் பாரு! பீரோத்துணில வச்சா அப்பிடியே புதிசா இருக்கும் என்று போற்றிப் போற்றி о б) о] II II Л ГТот. வரப்பில் நடக்கும்போது சேற்றில் விழக் கால் தடுமாறிவிட்டால், பிறகு குறித்துக் கரையேறிவிடலாம். இந்தச் சேற்றிலிருந்து கரையேறுவது எப்படி? நறுமண சோப்பு, பவுடர், பூ, பொட்டு, நல்ல சேலை, எந்த நீரினாலும் போக்கமுடியாத சேறு. "சின்னம்மா வராங்களா?...” "சின்னம்மாவுக்கு இப்ப வார புதுப்படம் எதுவும் புடிக்கலி பாம்.” கண்களைச் சிமிட்டுகிறான் சாலி, கோகிலத்தைப் பார்த்துக்கொண்டே இந்தக் கிராமத்திலிருந்து அவள் ஒடிச்செல்வதைப்பற்றி நினைக்கவே முடியவில்லை. சிறிது நேரம் வாசலில்போய் நின்றால்கூட பலருடைய கண்கள் தன்மீது பதிவது போலிருக்கிறது. ஆனால் இவ்வாறு வெளியே சென்றால் தப்புவதற்கு ஏதேனும் வழியிருக்காதா? அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மிகவும் கிலி