பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - சேற்றில் மனிதர்கள் பார்த்து நிற்கையில், சற்று எட்டி ஒரு ஆசனத்திலிருந்து மாலை தினசரியைப் பார்த்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று அவள் மீது படிகிறது. அவளும் பார்த்துவிடுகிறாள். "நீயா..?” தேவு, “நா. நான்தான். தேவு. நான்தான்!” இவள் அவனைப் பார்த்து தன் மன உணர்வுகளனைத் தையும் கொட்டிவிடும் பாவனையில் நிற்கிறாள். ".வா.வா காந்தி!.." சாலி மாடிப்படியில் நின்றழைக்கிறான். ஒட்டலின் கலகலப்பான கூட்டத்தில் அவளும் கலந்து துளியாகிவிடவேண்டும்போல் இருக்கிறது. தேவு. தேவுக்குத் தெரிந்திருக்குமோ? அவனுடன் அதிகமான பழக்கம்அவளுக்குக் கிடையாது. அவள் தந்தையிடம் தலைவர்' என்று வந்து நின்று குழையும் விவசாயத் தொழிலாளி அல்ல அவன். அன்று பஸ்ஸில் போகும்போது அவன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. தேவு..? அவன் எப்படிப்பட்டவனோ? அறைக் கதவைப் பையன் திறந்துவிடப் படியில் தாவி ஒடுகிறான். இவள் கால்கள் பின்னலிட அங்கேயே நிற்கிறாள். "..என்ன? வா, மேல.?” அதட்டினாற்போல் அருகில் வந்து சாலி அவளை அழைத்துப் போகிறான். "நா வரமாட்டேன். என்ன...” அவள் கத்த நினைக்கிறாள். குரல் எழும்பவில்லை. பயம் தொண்டையைப் பிடிக்கிறது. "என்ன திகச்சிப்போயி அங்கேயே நின்னிட்டே?..." "எங்கூருக்காரரு” என்ற சொல் வாயில் வந்துவிட்டது. அவசரமாக விழுங்கிக் கொள்கிறாள். - "ஒண்ணில்ல. அவரு கையில பேப்பரில ரஜினி ஆக்ட் பண்ணின சினிமா போல படம் இருந்திச்சி. பாத்தேன்." "இன்னிக்கு ரஜினி படம் போகனுமா, கமலஹாசன் படம் போகனுமா?”