பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 17 கிளியந்துறைக் கடைவீதி காலை நேரச் சுறுசுறுப்புடன் விளங்குகிறது. அருணாசலத்தின் காபிக் கடையில் சூடான இட்டிலியும் சட்டினியுமாக வியாபாரம் நடக்கிறது. சைக்கிள் கடையில் மாலை நேரத்தில்தான் வியாபார நெரிசல் என்றாலும் இப்போது அங்கு குந்தியிருக்கும் ஆட்கள் இருக்கின்றனர். ராமசாமி இப்போதுதான் கடை திறந்து முன்பக்கம் கயிறு வகைகள், வாளிகள் எல்லாம் எடுத்துத் தொங்கவிடுகிறான். பஸ்ளல"க்காகச் சுற்றுப்புறங்களில் இருந்து வரும் மக்களில் கோஷாப் பெண்கள் கூட்டம் ஒன்று இன்னமும் திறக்கப் பட்டிராத மிட்டாய்க்கடை வாயிலில் நிற்கிறது. நீலச்சட்டையும் அரும்பு மீசையுமாக, நாகரிக மெருகும் படிப்புக்குரிய அடக்கமான களையுமாக ஒர் இளைஞன் சைக்கிள் கடைப்பக்கம் வந்து நிற்கிறான். அவரையும் காந்தியையும் கண்டதும் மரியாதையாக"ஹலோ என்று முகமன் கூறுகையில் சம்முகம் உள்ளுறப் பூரித்துப் போகிறார். "தேவுதான, தம்பி, எப்ப வந்தாப்பல?” "இங்கதான இருக்கிறேன்? ரெண்டு மாசமாச்சி!" "அப்படியா? படிப்பு முடிஞ்சி போச்சா?” "லா படிச்சுருக்கேன். இன்னும் முடிக்கல. பரீட்சை எழுதணும்.” "அப்பிடியா? ஒண்ணுந் தெரியறதில்ல. வீட்டுப்பக்கம் வரக்கூடாதா? ஆமாம், ஊரிலே ஆரிருக்காங்க?" ■ அவன் புன்னகை செய்கிறான். "ஆரு, நாந்தானிருக்கிறேன். இப்படி வந்திட்டுப் போவேன்.” பஸ் வந்ததும் தங்களருகில் அவன் உட்கார்ந்து பேசுவதை விரும்புவான் என்று அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இவர்கள் ஏறி முன்பக்கம் இறங்கத் தோதாக அமர்ந்துகொண்டு அவனுக்காக ஒர் இடத்தை ஒதுக்கினாற்போலும் கூட நினைத்து அவனைத் திரும்பிப் பார்க்கின்றனர். ஆனால் தேவு, வேண்டாம் என்பதுபோல் வேறுபக்கம் அமர்ந்து கொள்கிறான். பஸ்ஸில் இவர் அமர்ந்திருப்பதை நடவுக்குச் செல்லும் வேட்டுவனுார் நாட்டாமை பார்த்து விடுகிறான். 'டவுன் போlங்களா, முதலாளி? ஐயா அம்மா எல்லாம் சொகந்தானா?” "சொகந்தா, எங்க நடவு?” சே -2