பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சேற்றில் மனிதர்கள் பொன் னடியான் குடிசைகளுக்கு முன் நின்று "யாருமில்ல?. ஏ. ராசாத்தி உங்கண்ணனெங்க...” என்று ஆள் கூட்டுகிறான். “எம்பேரு ராசாத்தியில்ல." இடையில் பாவாடை கிழிந்து தொங்க முடி அவிழ்ந்து மறைக்க அதேபோன்ற சாயலுடைய ஒரு குழந்தையை இடுக்கிக்கொண்டு நிற்கும் சிறுமி சிரிக்கிறது. சங்கத்துக் கதவாக அமைந்த இரட்டை வரிக் கீற்றை எடுத்து வைக்கிறான். திறப்பு வைபவத்தன்று சாணி மெழுகிக் கோலமிட்டதுதான். கருமை பூசிய பலகை ஒரு முட்டுக்கட்டை யின் ஆதரவில் சாய்ந்திருக்கிறது. உள்ளே ஆடு கோழி வகையறாக்கள் வந்து தங்கிய அடையாளமாகப் புழுக்கைகள், எச்சங்கள். "மாதர் சங்கத்துக் கிட்டாம்மாளக் காணம்! இத்த நறுவிசு பண்ணி வைக்கக்கூடாது? "தா. யாரங்க...? பாட்டி! கொஞ்சம் இங்க வா!...” ஒரு கிழவி தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய அகப்படுகிறாள். ஒரு கீற்றைக் கொண்டு வந்து போட்டு அமர்ந்து கரும் பலகையைத் துடைத்து, கையோடு கொண்டு வந்திருக்கும் சாக்குக்கட்டியால் தேதியை எழுதிப் போடுகிறான். பையிலிருந்து புதிய பத்திரிகை, சிறிய துண்டுப் பிரசுரங்களை எடுத்து வைக்கிறான். சம்முகம் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். மாடசாமி வாய்க் கார் கட்டம்போட்ட சிவப்புத் துண்டுடன் ஒடி வருகிறான். "முதலாளி. முதலாளி. வீரபத்திரனையும் குஞ்சிதத்தையும் போலீசில புடிச்சிட்டுப் போறாவ...!” “என்னடா..? போலீசிலா?” "ஆமா அக்கிரகாரத்துப் பக்கம் காலமேந்து கூட்டம் கூடிக் கெடக்குது.” 'ஏ, என்னாச்சி?” "கோயிலில் அம்மன் நகையெல்லாம் வச்சிப் பூட்டிருந்தாங் களாம். பொட்டி ஒடச்சிருக்குதாம்.” "அதுக்கு.? வீரபத்திரனுக்கென்ன? கோயிலுக்கு நகை