பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 193 சம்முகத்துக்கு நெற்றி வேர்க்கிறது. காலையிலிருந்து ஒழுங்காக ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. சிறிது நீராகாரம் அருந்திவிட்டு விடியற்காலையில் வயலுக்குச் சென்றவர்தாம். வீட்டுக்குச் சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது. "வாப்பா, பொன்னு, வீட்டுக்குப் போயிட்டு வரலாம்." சைக்கிளில் பின்னே அமர்ந்து கொள்கிறார். விரைவாகவே விடு திரும்பி விடுகின்றனர். சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே குனிந்து நுழைகிறார். வாசலில் பெட்டைக்கோழியும் ஒரு குஞ்சும் இரை பொறுக்குகின்றன. திண்ணையில் அப்பா படுத்திருக்கிறார். இப்போதெல்லாம் இவர் படுத்தே கிடக்கிறாரே என்று தோன்றுகிறது. வீடு திறந்திருக்கிறது. உள்ளே மனித அரவமே தெரியவில்லை. "அம்சு!...” கூவிக்கொண்டே நடுவிட்டில் துண்டைப் போட்டுக் கொண்டு அமருகிறார். தாய்தான் பின் தாழ்வரையிலிருந்து வருகிறாள். 'உக்காரு தம்பி. எங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்கிறாங்களா?” "காத்தான் மாமன் வந்து சொன்னா, நடவுன்னு நாளாக்கிப் பத்து ரூபாக்கிமேல செலவாவுதில்ல? போயிருக்காவ..." "சோறிருக்குதா, எதுனாலும் இருந்தா எடுத்து வையி. ஒரே குழப்பம். இப்ப போலீஸ் டேசனப் பார்க்க போவணும்." இ.தொன்றும் கவனமில்லாதவள் போல் உள்ளே பார்க்கிறாள் கிழவி. சமையலறை இருட்டிலிருந்து கையில் தண்ணிர் செம்புடன் வெளிப்படும் உருவம் கண்களில் முதலில் நிழலாக பின்னர் தூலமாக - உயிர் வடிவாகத் தெரிந்து பார்வையை அப்பிக் கொள்கிறது. தண்ணிரைக் கொண்டு கீழே வைப்பவள் குனிகையில் கன்னத்தில் நெருப்புத் தழலாக விரல்கள் வீறுகின்றன. தண்ணிர் சிதறப் பாத்திரம் பிடியைவிட்டு நழுவிச் சாய்கிறது. காந்தி இதை எதிர்பார்த்தவளாகவே சுவரைப் பற்றிக் சே -13