பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ண்ன் 19 "படிச்சிண்டிருந்தா இல்ல, மிஷன் ஸ்கூல்ல?" "ஆமாம், மூணு வருஷமாச்சி. எஸ்.எஸ்.எல்.ஸி. பண்ணி, மேல படிக்கவைக்க முடியல. இப்பதா, பாலிடெக்னிக்லேந்து இன்டர்வியூ வந்திருக்கு கூட்டிட்டுப்போறேன்." "அப்படியா? படிக்க வையி. உங்களுக்கெல்லாந்தான் அரசு எல்லாம் செய்யக் காத்திண்டிருக்கே? உம் பையன் கூட பி.ஏ. படிச்சான் போல இருக்கு? வேலை பண்றானா?” தெரிந்துகொண்டே கேட்கும் கேள்விதான் என்று படுகிறது. "மட்ராசில இருக்கிறான். ஹான்ட்லும் போர்ட் ஆபீசில." "கல்யாணம் காட்சி பண்ணிருக்கியா?” 'எல்லாம் அவனே பண்ணிக்கிட்டான். என்னத்தப் பேசறதுங்க.." 'ஒ. கேள்விப்பட்டேன் போலிருக்கே... எல்லாம் ஒண்ணாப்போச்சு இப்ப, இங்க கூட்டிட்டு வந்தானா?” "இல்ல, இப்ப ஊருக்கு வந்திருக்கிறான். எங்களுக்கு ஒண்னுமில்லன்னாலும், பட்டணத்தில் பழக்கப்பட்டவங்க, கிராமத்தில எப்படி வந்திருப்பா?” "பட்டணத்துல பழக்கப்பட்ட பிறகு யாரு வரது. இப்ப உம் பொண்ணே நாளக்கிப் படிச்சு பெரிய பதவில வந்த பெறகு கிராமத்தில வந்து குடிசயில இருப்பாளா? உன்ன அப்பன்னு சொல்லிக்கவே வெக்கப்படுவா!... முன்னப்போல கிராமத்துல யாரு இருக்கப்போறாங்க? ஏழும் ஒம்பதும் கூலி குடுத்து ஆருக்குக் கட்டுப்படியாவும்?” இவருக்கு முகம் சிவக்கிறது. "ஏழு ஒன்பது கூலிலதா எல்லாம் பாயுறாங்க. சேத்தில உழலுறவன் இந்த வெலவாசில அரவயித்துக் கஞ்சி குடிக்க வாணாமா?” "யாரு வாணாங்கறாங்க? வரியையும் உசத்திப்போட்டான். உரவெல, பூச்சி மருந்துவெல, ஆள் கூலி இதெல்லாம் கணக்குப் பாத்தா யாருக்கு விவசாயம் பண்ணனும்னு இருக்கு? உழுதவன் கணக்குப் பாத்தா உழக்கு மிச்சமில்லங்கறது அன்னிக்கு இல்ல, இன்னிக்குத்தா மெய்யாயிருக்கு." இவர் பேசவில்லை. சட்டென்று யாரும் தொழிலாளியின் கூலியில்தான் பாய்கிறார்கள். ஒரு அலுவலகக் கடை நிலை ஊழியன் வாங்கும்