பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 217 "வளச்சிக்கிடட்டம், ஆனா நாம இங்க உக்காந்திருக் கிறதா?..." அம்மா வருகிறாள். கண்களைச் சரித்துக் கொண்டு. "அல்லாரும் ரோட்டாண்ட போறாவ. சேத்துரு மதகுக் கப்பால ஒடயாரு ஆட்ட போயிச் சொல்லிட்டு வாரக் காலமேயே குப்பன் சாம்பார அனுப்பிச்சிருக்கு இவளுவல்லாம் போனா ஒரு தவ தண்ணிவோணுமில்ல?.” "அது சரி, ஆரு இதெல்லாம் இப்ப திடீர்னு கெளப்பி விட்டது அம்மா?” "ஏண்டா. ஆருன்னாலும் கெளப்பனுமா? வகுத்துப்புள்ள அந்த நேரம் வந்ததும் வாராப்புலதா என்னா அக்குரவம்: பொம்பிள எத்தினிக்குப் பொறுப்பா? காந்தி திடீர்னு ராத்திரி எந்திரிச்சிப் போலாம்னா. பொம்பிளயப் போலீஸ் டேசன்ல வைக்க அதிகாரம் இல்ல. போயி வுடச் சொல்லுவம்னா. கெளம்பிட்டாளுவ போவட்டும்னு நானுந்தா சொன்னே. தா, ஆத்துக்கப்பால மேக்கால கெளக்கால எல்லாச் சேரி சனமும் பொம்பிளயும் போங்கடான்னு சொல்லச் சொன்னே. இந்தக் கெளவனும் கொமரிப் பெண்ணும் இல்லன்னா நானுந்தா போயிருப்பேன். வந்தது வாரது, துணிஞ்சடிச்சுப் போவம்! இனிமே என்னாத்துக்குடி பயப்படனும்? இனிமே எழக்கப் போறது ஒண்ணில்லன்னு போகச் சொன்னே." சம்முகம் சட்டைப் பையில் கடனாகப் பெற்று வந்த ஐம்பது ரூபாயை நெருடிக் கொள்கிறார். போகாதீர்கள் என்று தடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், காந்தியா இவ்வளவு புகை எழும்பப் பொறி இட்டிருக்கிறாள்? வீரமங்கலத்தில் ஒரு பொதுக் கூட்டம் போட்டிருக் கிறார்கள் என்ற நினைவு வருகிறது. ஊனமுற்றோருக்கு உதவியளிக்கும் வங்கி விழா. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விளம்பரங்கள் தொங்கின. பெரிய சாலையில் புதுக்குடியில் ஆட்சியாளர்களை, அதிபர்களை வாழ்த்தும் வளைவுகளும் தோரணங்களும் அமர்க்களமாக இருந்தன. காவல்துறை மிகக் கெடுபிடியாக இருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் புகுந்தால் என்ன நடக்கும்? -- சம்முகம் வீட்டுக்குள் அடி வைக்காமலே குளத்தைச்