பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O சேற்றில் மனிதர்கள் சம்பளம் கூட இந்தத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை என்பதை யாரிடம் சொல்வது? புதுக்குடி பஸ் நிறுத்தத்தில் அநேகமாகப் பஸ்லே காலி யாகிவிடுகிறது. தேவு இறங்கிச் செல்வதை ஒரத்திலமர்ந்திருக்கும் காந்தி பார்த்துக் கொண்டிருக்கையில் சிவப்புக் கட்டத் துண்டுடன் சின்னராக ஏறி வருகிறான். “காம்ரேட் எங்க? - தஞ்சாவூருக்கா?” "ஆமாம், நேத்து ஊருக்குப்போன பிறகுதான் தெரியிது. இதுக்கு இண்டர் வியூக்கு வந்திருக்கு. நான் சொன்னனில்ல நேத்து?” - "அப்படியா மகிழ்ச்சி. மார்க்கெல்லாம் நல்லா இருக்கில்ல?" "இருக்கு, இருந்தாலும் தேர்வு செலக்ஷனாகி, ஆஸ்டல் பாத்து சேத்துவர வரய்க்கும் கவலதான?” "அதொண்ணும் தொந்தரவு இல்ல காம்ரேட் நம்ம. கிள்ளிவளவன் இருக்காரு அந்த போர்டிலன்னு சொல்லி க்கிட்டா. உங்களுக்குத்தா அந்த நாளிலேந்து தெரியுமே?." "அப்படியா? கிள்ளிவளவனத் தெரியுமாவது? ஒண்ணா எத்தினி போராட்டத்தில் போயிருக்கிறோம்? நம்ம சுந்தரமூர்த்தி வீட்ல அவர முதல்ல திராவிட இயக்கம் ஆரம்பிச்ச நாள்ளந்து பழக்கம். அக்கிரகாரத்தில மாட்ட ஒட்டிட்டுப் போடாம்பாரு. வளவந்தா மீட்டிங்கில பேச வருவாரு...” "பின்னென்ன? இடம் கிடச்சாச்சின்னு வச்சிக்க!” மிகவும் தெம்பாக, உற்சாகமாக இருக்கிறது. தாழ்த்தப் பட்ட இனத்தினருக்கான கல்விச்சலுகை விடுதியிலிருந்து படிக்கவும்கூட உதவிபெறலாம். பிறகு. வேலை. இவர்கள் கொள்கை வழியிலே நிற்கும் முற்போக்கு இளைஞனாகப் பார்த்துத் திருமணம். பையனைப்போல் இவளை விட்டுவிடக் கூடாது. இவளைத் தம் ஆளுகையில் இருத்திக்கொள்ள, ஒரே கொள்கை யாளாகப் பார்த்துச் சம்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அது அப்படி அசாத்தியமல்ல. பஸ் நிறுத்தத்திலிறங்கி நடக்கிறார்கள். கால் வலிகடிடத் தெரியவில்லை. பழைய நாளைய அரண்மனைக் கட்டிடம். வெளியே சைக்கிள்கள் நிற்கின்றன. பெஞ்சியில் பெண்கள், தந்தையர்,