பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சேற்றில் மனிதர்கள் "சோறு சமச்சி வைக்கிறாயாடி?... எதுனாலும் போட்டு ஒரு குளம்பும் காச்சி வய்யி. அந்தப்பய எங்க இருக்கிறானோ?” "காணம் பாட்டி..!" 'ஒடிப் போயிட்டு வருவா. என்னமோ கப்பலே முழுவுறாப்பல இருக்கு, அவனப்பத்தி என்ன இப்ப?” அம்சுவுக்கு உள்ளுற ஏதோ ஒர் அச்சம் ஆட்கொள்ளு கிறது. சோற்றை வடித்துவைத்து, ஒரு காரக் குழம்பைக் கூட்டி வைக்கிறாள். வீடுபெருக்கி, மாடுகளுக்குத் தண்ணிர் காட்டி, எல்லா வேலையையும் முடித்தாயிற்று. வெயில் பின் முற்றத்துச் சுவரில் ஒடிவிட்டது. காந்தி மணிக்கணக்காகப் புத்தகம் படிப்பாள். படங்கள் கத்திரிப்பாள். ஒட்டுவாள். ஏதேனும் வீட்டுக்குள் செய்வாள். அம்சுவுக்கு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கவே பொருந்தாது. நாகு இத்தனை நேரம் எங்கும் போய் வராமலிருந்ததில்லை. ஒருமுறை மருள் நீக்கி வரையிலும் போய்விட்டான். அவனை அந்தப் பக்கத்தில் எல்லாருக்கும் தெரியும். கொண்டு வந்து விட்டுவிடுவார்கள். அவனுக்குத் தண்ணிரைக் கண்டால் பயம். ஆறு குளத்தில் நிச்சயமாக இறங்கமாட்டான். o, நெருப்புப்பெட்டி கிடைத்தால் கொளுத்துவான். பீடி குடிக்கவேண்டும் என்று சாடை காட்டுவான். வெளியே யாரேனும் குடித்துக் கொண்டிருந்தால் போய்க் கேட்பான். கோடித் தாத்தா அவனுக்குப் பீடி குடிக்கக் கொடுப்பார். அவள் அம்மா திட்டுவாள். "என்னாடி? அம்சு? இங்க வந்து நிக்கிற?" "நாயக்கர் வூட்டம்மா!' "வாங்கம்மா... வாங்கம்மா!...” "என்னாடி? எல்லாம் பேசிக்கிறாவ? உங்கக்கா வந்திட்டா ளாமே?” "வாங்கம்மா, பாட்டி இருக்கு...” "கேட்டதுக்குப் பதிலக் காணல?..." "ஆமாம்மா. அல்லாரும் இன்னிக்கு அஸ்தமங்கலம் போயிருக்காவ..." “என்னா விசேசம்?” "வீர புத்திரன் மாமாவப் போலீசில புடிச்சி வச்சிருக்கா வல்ல? அதுக்குத்தா?” -