பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சேற்றில் மனிதர்கள் "வச்சே! நீங்க சாப்பிடுறீங்களா?...” வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வேண்டாம் என்று மாரியம்மா கைகாட்டுகிறாள். "நாம் போறேன். பதனமா இருந்துக்க. அந்தப் பயல முடுக்கி வுட்டுட்டுப் போறேன். ரெண்டு வெறவு இருந்தா தாயே?” முட்சுள்ளியை ஒடித்துக் கூடையில் வைத்துக்கொண்டு செல்கிறாள். இவர்களுக்கே விறகு தீர்ந்துவிட்டது. மூங்கிற் காட்டில் போய் கொஞ்சம் சேகரித்து வரவேண்டும். கொல்லைப்படலை இழுத்துக் கட்டிவிட்டு வாசற்பக்கம் வருகிறாள். "சோறு சாப்பிட்டுட்டுப் படுத்துக்கடீ. நா மூக்கனப் போயிப் பாத்துட்டு வரச்சொல்லுற.” கிழவர் எழுந்து கேட்கிறார். 'எல்லாம் எங்க போயிட்டாவ?” o "முன்ன போனமே புதுக்குடிக்கு அப்படி எல்லாம் போயிருக்காவ.” "கூலித் தவராறா?...” 'இல்ல. பொம்பிளயப் போலீசில கூட்டிட்டுப் போயிருக்கிறானா...” ஒரு வசையை உதிர்த்துவிட்டுச் சாராயத்தைப் பருகுகிறார். லொக் லொக்கென்று இருமல் வருகிறது. தெருவில் பிள்ளைகள் குஞ்சுகள் போகும் அரவங்கள். யார் வீட்டிலோ பிள்ளை அழுகிறது. மாடத்தில் முணுக் முணுக்கென்று சிம்னி விளக்கு எரிகிறது. நடுவிட்டில் அம்சு விரிப்பை விரித்துப் படுக்கிறாள். பாட்டி அருகில் வந்து சுருங்கிய கையை அவள் தலையில் இதமாக வைக்கிறாள். "சோறு தின்னியா கண்ணு?...” "அவுங்கல்லாம் வரட்டுமே!...” இருளில் மூங்கில் தோகைகள் சரசரப்பதுபோல் ஒசை கேட்கிறது. "பாட்டி! நாவு. நாவு வந்திருக்கிறா...?” "நீ இரு. நாம் போயிப் பாக்கிறே.”