பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 i சேற்றில் மனிதர்கள் சொல்லி எங்கம்மா போயி கூட்டியாந்தாங்க. குஞ்சிதம் நெருப்பு வச்சிட்டுத் தானே வுளுந்தாங்கறது பச்சப் பொய்யி?” "அப்ப நான் வரேன்.” "வாங்கையா. கடசீவரய்க்குமில்ல, நம்பிக்கைய எப்பவும் வுடுறதில்ல. நமக்கு அடுத்த தலைமுறையும் நியாயத்துக்குப் போராடியே ஆகணும்னிருக்கு." ". சம்முகம் கண்ணிரைத் தேக்கிக்கொள்ளும்வகையில் வானைப் பார்க்கிறார். வானில் கருமை அச்சுறுத்தக் குவிகிறது. கீழே விழுந்த பச்சை நெல்லைக் குவித்துச் சாக்கில் போட்டுக் கட்டிவைக்கிறார். பகலுணவுக்குக்கூட ஒய்வு கொள்ள இயலாதபடி வான் கருமை குவிந்து துாற்றல் விழுகிறது. புகையிலையில் ஊறிய எச்சிலைத் துப்புவதற்கும் கூட ஒடாமல் மணிகளை வேறாக்க, அரிக்கற்றைகளை ஒங்கி ஓங்கி அடிக்கிறார்கள். திருக்கை மீன் வாலினால் செய்த சாட்டையடியும், முரட்டுக்காலணி உதைகளும் பட்ட சாம்பாரின் மேனி, தளர்ந்து குலுங்குகிறது. அதைப் பார்க்கையில், தலைமகனுக்கும் அதே அநுபவங்கள் தொடருகின்றனவே என்று நெஞ்சம் இறுகுகிறது. ஆண்டானும் அடிமையும் இல்லை என்று சட்டப்படி தீர்ந்துவிட்ட பின்னரும் விடிவு காலம் வரவில்லை. நெஞ்சைக். குறுக வைக்கும் இழி சொற்களும், உடல் வாதையில் துடிதுடிக்க இம்சைகளுக்கும் ஆளாக இவர்கள் என்ன தவறைச் செய்திருக்கிறார்கள்?. "மழ கொட்டும்போல இருக்கு முதலாளி. போயி வண்டி கொண்டிட்டு வாங்க...!" வியாபாரிகள் உள்ளுரில் இருக்கிறார்கள். கேள்விப்பட்டு இந்த நெல்லை வாங்க வருபவர்கள் யாரும் இல்லை. மழை என்றால் வியாபாரிகளுக்குக் கை மேலாகிவிடும். ஆழும்பாழு மாகப் போகும்போது இன்னும் விலையைக் குறைப்பார்கள். வடிவு இல்லாதது கை ஒடிந்தாற்போல் இருக்கிறது. இன்னும் கட்டுக்களைச் சுமந்து வரப்போடு நடந்து, மடைகளில் இறங்கிக் கடந்து, கொண்டுவந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர். சம்முகம் ஒடிச்சென்று வண்டி பிடித்துவருகிறார்.