பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சேற்றில் மனிதர்கள் கொளத்துக்குப் போயி சொல்லிட்டு வந்திருக்கிறா! பஞ்சமியும் சோலையும் நாங்க கெளம்புறப்ப வாறாங்க. ஏ.ண்டால, சம்முவ வாய்க்காரக் கேக்காம நீயா என்னடா இது"ன்னு கேட்டேன். மொகங் குடுத்தானா?. அந்த வெடப்பய தேவு, அவம் பேச்சக் கேட்டுக்கிட்டு, பொம்பிளயள எறக்கினா ஒங்க மக. அது என்ன மாரியாத்தா ஆவேசம் வந்தப்பல ஒரே புயலால்ல பேசிச்சி? இப்ப என்ன ஆச்சி! அவனுவ அநியாயத்துக்கு நூறாயிரம் சாட்சி கொண்டாருவானுவ நாம எங்க போவம் சாட்சிக்கு?" "அப்படி எல்லாம் இல்ல சாம்பாரே, நமக்கு சாட்சி இருக்கு சத்தியம் எப்பவுமே அநாதயாயிராது!" "குந்தக் குச்சில்லன்னு இருக்கிறோம். எப்பிடிக் கேசு நடத்தி எப்பிடி மீளப்போறம்? கண்ட கனாவெல்லாம் கதிர் முத்துறப்ப பொகையான் வுழுந்தாப்பல பாழாயிடிச்சே!” "சாம்பாரே, நீங்க என்னாத்துக்கு இப்பத் தனியா பிரிச்சுப் பேசுறீங்க? இது ஒங்க மகனோட ஒரு தனிப்பட்ட விவகாரமும் வழக்குமுமில்ல. இந்த உலகம் முச்சூடும் உள்ள சமுதாயப் பிரச்சினையோட வழக்கு. சமுதாயம் உசிர்விாழ, ஆதித் தொழில் இது மண் ஒரு தனிப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் சொந்த மில்லங்கறது தீரனும் காத்து, சூரியன், சந்திரன் இதெல்லாமும் போல மண்ணும் தண்ணியும்னு தீரனும். நாம இதுக்காகப் போராடுறோம்னு நினச்சிக்குங்க. நீங்க என்னாத்துக்கு அதைரியப்படனும்? நாம செய்யிற தொழில் இல்லேன்னா. எதுவுமே இல்லே!" வீட்டருகில் வண்டி வந்து நின்றதும், ஒட்டிவந்த செவத்தையனே மூட்டைகளை இறக்கித் திண்ணையில் போடுகிறான். அம்சுவும் லட்சுமியும் கூட்டி ஒழுங்காக்கி வைத்திருக்கிறார்கள். இதற்குள் சங்கிலி, கருப்பன் எல்லோரும் வருகிறார்கள். டீத்துள் போட்டு நீர் காய்ச்சி இறக்கி வெல்லம்போட்டு அம்சு எல்லோருக்கும் வழங்குகிறாள். 'சம்முவம் களத்து மேட்டுல இருக்கிறானாடா சங்கிலி?” பாட்டிக்கு மகனைப் பற்றிக் கவலை. "பாழாப்போன மழ இன்னும் ரெண்டவுரு பொறுத்