பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 237 திருக்காது? அவுரு நாயக்கர் வூட்டுக்குத் தார்ப்பாயி வாங்கியாரப் போயிருக்காரு!" நாகு வண்டியைப் பார்த்ததும் ஹைஹை என்று ஒடி வருகிறான். "போட.ல.போ!' மூட்டைகளை அடுக்கியபின் எல்லோரும் அங்கேயே காத்திருக்கின்றனர். இருள் வருவது தெரியாமலே கவிந்திருக்கிறது. திண்ணையிலிருக்கும் கிழவர் சட்டென்று விழித்துப் பார்க்கிறார். "மழையா பெய்யிது?" "ஆமா. குடிக்கிற நேரம் வந்திரிச்சின்னா எந்திரிப்பே' பாட்டி அதட்டுகிறாள். அம்சு மாடத்தில் விளக்கேற்றிக்கொண்டு வந்து வைக்கிறாள். . 'அறுப்புவுட்டு, மழ புடிச்சிக்கிச்சே, பாதி நெல்லு வூட்டுக்கு வர லியே, எங்க கெடந்து அல்லாடுறாங்களோன்னு தவிக்கிது மனக..." "மள பெய்யிது. வாமடல துணியக்கட்டி வச்சா மீனு வுளும். எனக்குதா கண்ணு சுத்தமாத் தெரில. ஒருக்க பாரு..." என்று ஆரம்பித்துத் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளவும், பாட்டி மீண்டும் அதட்டுகிறாள். "தாத்தா அந்த காலத்துலியே இருக்காரு" என்று குந்தி இருந்து பீடி குடிக்கும் சங்கிலி சிரிக்கிறான். அப்போது, தன் பையினால் தலை முகத்துக்கு காப்புச் செய்துகொண்டு காந்தி விரைந்து வருகிறாள். தொடர்ந்து முழுதாக நனைந்த கோலத்தில் லட்சுமியும் சம்முவமும் வந்து படியேறுகின்றனர். "அட... காந்தி? நீ எப்ப வந்த?.” 'வந்திட்டே இருக்கிறேன். பஸ்ஸ அன்னாண்டயே நிறுத்திட்டான். அறுப்பு வுட்டிருக்கீங்களாப்பா இன்னிக்கி? நா நெனச்சிட்டே வந்தேன். நாகபட்டணத்துக் காப்பால காற்றழுத்த மண்டலம் உருவாகிறதுன்னு ரேடியோவிலே நேத்தே சொன்னான்.” "ஒடயாரப் பாத்தியா?.