பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சேற்றில் மனிதர்கள் ஆனால் அப்போதெல்லாம் கூட இந்தத் தொய்வும் அவநம்பிக்கை நிழல் காட்டும் தளர்ச்சியும் இல்லை போலி ருக்கிறதே? வாழ்க்கையில் பற்றும் பசுமையும் பெருமிதமும் இப்போதுதான் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன. காந்தி மிகுந்த சூடிகையுள்ள பெண் என்றேனும் அவளோடு சங்க அலுவலகத்தில் தங்க நேர்ந்தால்கூட, பத்திரிகை புத்தகங்கள் என்றுதான் கண்கள் நோட்டமிடும். மூன்று வருடகாலம் அவளை முடக்க வேண்டி வந்து விட்டது. அவளுக்காக நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கிவரவேண்டும். இல்லையேல் தானே செல்வதாக நிற்பாள். இவள் தகுதி - தாழ்த்தப்பட்ட இனம் - அம்பேத்கார் பேரைக்கொண்ட கல்விக் கொடை நிறுவனம். கிள்ளிவளவன். மூன்று கால்களும் உறுதியானவை. இந்தக் கால்களில் மாடமாளிகை எழுப்பமுடியும். 'எலக்ட்ரானிக்ஸ் அது இது என்றெல்லாம் அவள் சொல்லும் சொற்கள் இவருக்கு அவ்வளவு புரியவில்லைதான். இவர் படித்த தெல்லாம் ஐந்தாவது வரையிலுமே. பின்னர் விசுவநாதனும், இராமச்சந்திரனும் நெடுங்காடியும் பாசறையில் கற்பித்த பாடங்களே அவரை ஒரு சங்கத் தலைவனாக்கியிருக்கின்றன. உள்ளே இறுக்கம் தாங்கவில்லை. துண்டால் விசிறிக் கொள்கிறார். காந்தி வெளியே வருகிறாள். அப்பாடா...! - "என்னம்மா? எல்லாம் நல்லபடியாச் சொன்னியா?” "இருங்கப்பா, உங்களை அவரு பார்க்கச் சொன்னாரு..." "யாரு...?” "அதா, உயரமா முடிய இந்த பக்கமா வாரிட்டு இருந்தாரு போறதுக்குமுன்ன அரைமணி கழிச்சிப் பார்க்கச் சொல்லுன்னு சொன்னாரு...” "கிள்ளிவளவனா? போர்டில இருக்காருன்னாங்க. உங்கிட்ட காபகமாக் கேட்டாரா?” ஆவல் அடுக்கடுக்காக விரிகிறது. "அவுருதாம்போல இருக்கு மூணுபேரு இருந்தாங்க. எந்த ஸ்கூலில் படிச்சே? ஏ மூணு வருஷமா சும்மா இருந்தேன்னுதாங் கேட்டா. நான் வசதியில்ல. ஊரைவிட்டு வரமுடியலன்னேன். தாத்தா பேரச் சொன்னாரு அவுரு. ராமசாமி வாய்க்கார் மகன் சம்முகமா உங்கப்பான்னாரு...”