பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 25 "இரண்டாயிரமெல்லாம் நினைக்கக்கூட முடியாதுங்க." "கொஞ்சம் குறைச்சிக்குங்க.." என்று சொல்ல எழுந்த நா உடனே சுய மரியாதையில் அடங்கிப்போகிறது. இவனிடம் இதற்குப் பேரமா? - "அதான், பிரத்தியேகமாக உங்களுக்குச் சொன்னேன். எப்படியானும் முதல்ல கட்டிடுங்க, உங்க பெண்ணுக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கே பெருமை." "சரிங்க, பார்க்கிறேன்.” “வணக்கம்...” காந்தியும் கும்பிடுகிறாள். வெளியே படிகடந்து வந்தபின்னரும் இருளடித்துப் போனாற் போலிருக்கிறது. 3 வயிற்றுப் பசி புதிய எரிச்சலில் தெரியவில்லை. எங்கே போகிறார்கள் என்பது உறைக்காமலேயே பஸ் நிறுத்தத்துக்கு நடக்கின்றனர். 'எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே நல்ல எதிர்காலம்னு நினைச்சேன். நடுவில் முனு வருசம் நிக்காம மூச்சப் புடிச்சிட்டிருந்தா. இதுக்குள்ள பி. காம்னாலும் மூணாம் வருசம் வந்திருக்கலாம். அப்ப பியூஸி. எனக்கு ஈஸியா எபீட் கிடைச்சிருக்கும்.” "அதுதா முடியலியே? இப்ப அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? ஏதோ இருநூறு முந்நூறுன்னா ஒழிஞ்சி போவுதுன்னு சமாளிச்சுக் குடுத்துடலாம். ஒரே முட்டா ரெண்டாயிரம்னா எங்கே போக?” 'அறுப்பானதும் திருப்பிடறதாச் சொல்லி யாரிட்டன்னா லும் புரட்ட முடியாதாப்பா? அவளுக்கு எப்படியேனும் இடத்தைப் பிடித்துவிடவேண்டும் என்ற துடிப்பாக இருக்கிறது. விவசாயத்துக்கே அறுப்பை நம்பிக் கடன் வாங்கியிருக்கும் . நிலை. அதுவும் குறுவை ஒரு சூதாட்டம்தான். வந்தால் வந்தது; வராவிட்டால் போச்சு. பச்சை நெல்லைக் களத்திலேயே விற்றுத்தொலைக்கவேண்டும். அந்தக் கெடுபிடியைத் தெரிந்து கொண்டு வியாபாரி கொள்ளாவிலைக்குப் பேசுவான். எங்கே போய்ச் சொல்லி அழ! -