பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சேற்றில் மனிதர்கள் "அங்க யாரிருக்கா? பழனி, இல்லாட்ட. ஆருமில்ல?” அவர் முணுமுணுவென்று பேசுவது யார் காதிலும் விழவில்லை. ஆனால் ஒட்டலிலிருந்து சாப்பாடோ எதுவோ வாங்கிவரச் சொல்கிறார் என்று சம்முகத்துக்குப் புரிந்துவிட்டது. பிறகு வந்து உட்காருகிறார். "என்ன சொல்லிட்டிருந்தேன்." "ஆமாப்பா, எல்லாரும் மதம் மாறுறாங்களாமே? என்ன கேலிக் கூத்து பாரு? அஞ்சு நா முன்ன, சீனுவாசன் வந்திருந்தான். பூதலூரு, அவன் தாம்பா, சட்டப்படி 35-65க்கு ஒத்துக்காம சண்டியன் கோனாரு இழுக்கடிச்சி இவனும் விட்டேனா பாருன்னு கேசு நடத்தி ஜயிச்சான். உனக்குத் தெரியும்.” "ம், சொல்லுங்க?" "அவன் சொல்லிட்டிருந்தான். என்னங்க போராட்டம் போராடுகிறது? இன்னும் எங்க சேரில கோடை வந்தா குடி தண்ணி இல்ல. மனிதன் செத்தா புதைக்கச் சுடுகாடு இல்ல. ஒட்டுமொத்தமா மதம் மாறுறோம்னு அறிக்கை வுடலாம்னு பார்க்கிறேன்னு...!" சொல்லிவிட்டு ஆஹாஹா என்று சிரிக்கிறார். சம்முகத்துக்குச் சுருக்கென்று ஊசி குத்துகிறது. படலையைத் துக்கி எறிஞ்சிட்டுத் தோப்பு வழி பொணத்தைக் கொண்டு போங்கடா என்றாரே, என்ன செய்தார்களோ? இந்த நெருக்கடிகளில் கூட விட்டுக்கொடுக்காத சண்டியர்கள் இருக்கிறார்கள். "நீங்க சிரிக்கறீங்க. அன்னிக்குப் போராடித் தலைதுாக்கியது உண்மைதான். ஆனா, இன்னும் போராடுற நிலையிலேயே இருக்கிறோம்ங்கிறத நினைச்சா எதுவும் தோணல. முன்ன வெளியாளுக்கு இருந்த அநுதாபம் ஆதரவுகூட இன்னிக்கி இல்ல. உண்மை இதுன்னா நம்பக்கூட மாட்டாங்க." உள்ளிருந்து அம்மாள் தலை நீட்டுகிறாள். "எல போட்டிருக்கு. வரச்சொல்லுங்க!” "எல இருக்கா? நா ஆளனுப்பிச்சேனே!" "வாப்பா, சம்முகம், கால் கை கழுவிவிட்டு வா! போம்மா உள்ள!” கொல்லைக் கிணற்றடியில் சென்று கை கால் கழுவிக்கொண்டு வருகையில் கூடத்தில் இரண்டு தையல்