பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சேற்றில் மனிதர்கள் மீண்டும் வாயிலுக்கு வருகையில் வாசலில் ஒரு சிவப்பு, கறுப்பு வண்ணம் இசைந்த கார் நிற்கிறது. வெளியே வரவே பிடிக்காமல் அட்டையாக மனம் சுருங்கிக்கொள்கிறது. காந்தி பெஞ்சியோரம் நிற்கிறாள். தொப்பி போட்டாற்போன்று தலைமுடியும் பெரிய நிழற் கண்ணாடியுமாகச் சவடாலாக நிற்பவன் ஆறுமுகத்தின் மகன் என்று உடனே புரிந்து கொள்கிறார். "என்ன மாமா? ரமேஷ்கிட்டேந்து லெட்டர் வருதா? நம்ம ப்ரஃண்ட் ஒருத்தரு சில விவரம் கேட்டிருந்தாரு போயி எழுதறேன்னு சொன்னான். நிதம் இந்தப் பக்கம் வரதுதான் விசாரிக்க மறந்திடுவேன்.” "ஒண்னும் வரலியே? உனக்கே போடுவான். ஏம்பா நா உங்கப்பாவப் பாக்கணுமின்னேன். ஆளைக்காணவேயில்லை. பெரிய மனுசங்களாயிட்டீங்க...!” "ஒ, அதெல்லாம் இல்ல மாமா. அப்பா சிங்கப்பூர் மலேயால்லாம் போயிட்டு போன வாரந்தா வந்தாரு அதோட, ரைஸ்மில்ல மார்டனைஸ் பண்ணுறது சம்பந்தமா அலஞ்சிட்டி ருக்காரு. ஒருதரம் முன்ன அட்டாக் வந்ததிலே ருந்து எச்சரிக்கையா வேற இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு." "சொல்ற மாமா, நா வரட்டுமா? விசாரிச்சிட்டுப் போலான்னு வந்தேன்.” r திரும்பும்போது காந்தியின் பக்கம் அவன் பார்வை நிலைக்கிறது. "பை த பை... நீங்க, கோபாலு எலிஸ்டர்ல்ல?” அவள் கண்கள் அகலுகின்றன. "ஆமாம், அண்ணனத் தெரியுமா?” * "தெரியாம? காலேஜில ஒண்ணாப் படிச்சமில்ல?” கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கைகளில் தட்டிக் கொண்டே அவளைப் பார்த்து முறுவலித்து "வரேன்” என்று விடை பெறுகிறான். அடுத்த நிமிடம் கார் கிளம்பிச் செல்கிறது. "சம்முகம்! ஏன் அங்கியே நின்னிட்ட?” "நிக்காம என்ன செய்யிறது.” "பயலத் தெரியிதல்ல? ப.லே. எமகாதகன். அப்பனின்