பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 41 "ஆமா பொணம் கொண்டிட்டுப் போகலன்னு வந்தாங் களே? அது யாராச்சும் வந்தாவளா?” "நீங்க என்ன ஊரக்கப்போர எல்லாம் சாரிச்சிட்டு! இவனுவளும் கேக்கிறபடி கேட்டிருக்கமாட்டானுவ பொட்ட யதிகாரம் பண்ணிருப்பா. தோப்புல தேங்காயெல்லாம் பூடுதுன்னு படலயப் போட்டு மூடி வச்சிட்டானுவளாம். ரோடு சுத்திப் போய்க்கிங்கன்னானுவளாம். எங்கேந்து ரோடு சுத்த? அங்கியே குழிச்சி மூடிருப்பா..." - = உலர்ந்த சேலையை உடுத்துக்கொண்டு ஈரத்தைத் தாழ் வாரச் சுவரில் கட்டுகிறாள். காந்தி இன்னும் எழுந்திருக்கவில்லை. “ஏண்டி மோட்டுவளயப் பாத்திட்டு உட்கார்ந்திருக்கிற? எந்திரிச்சி விளக்கப் பொருத்தி ஒலயப்போடு. நாங்கடக்கிப் போயிட்டு விருவிருன்னு செலவு சாமானம் வாங்கியாரேன். புளி தீந்துபோச்சி.” "போம்மா, முள்ளு கையக் குத்துது...” லட்சுமி அவள் கன்னத்தில் இடிக்கிறாள். "என்னாடி? எப்பிடியிருக்கு? பெரி. மவரானின்னு நினப்பா? சீ, கழுத, குந்தவச்சி சோறுபோட இது பெரும் பண்ண சமீனில்ல? அந்தப் பொண்ணு, இங்க கரையேறி முடிஞ்சி, வேற பக்கம் நடவுக்குப் போட நாலு ரூபா சம்பாரிச்சிக் குடுத்திட்டு நாயக்கர் வீட்டுக்கு ஒடிருக்கு அம்புட்டுத் தண்ணியும் துரக்கி, பெருக்கி மொழுவி, கழுவி, எத்தினி வேல செய்யறா? காலம எந்திரிச்சி சீவி சிங்காரிச்சிட்டு போயிட்டு ஒடம்பு நலுங்காம வந்து குந்திக்க!” "ஆமா, பின்ன ஏன் படிக்கப் போட்டிய? படிக்க வச்சா ஒழுங்கா வக்கணும். பாதி ஆத்துல இறக்கி வச்சிட்டு கைவுட்டுடக் கூடாது?” i. "என்னாது? பாத்தீங்களா இவ பேச்ச? மூஞ்சி முகர பேந்து போயிடும். எந்திரிடி சொல்ற?. பொட்டக் கழுதய என்னிக் கின்னாலும் கட்டிக் குடுக்கனும், நம்ம விரலுக்கு மிஞ்சி எடுப்பு வானாம்னேன், உங்கையா கேக்கல.” சுவரொட்டி சிம்னி விளக்கை ஏற்றிச் சமையலறையில் வைக்கிறாள். இந்த வீடு கட்டி ஒன்றரை வருசமாகப் போகிறது. இன்னமும் விளக்கு இழுக்க நேரம் வரவில்லை. குறுவை அறுப்பு முடிஞ்சி இந்த வருசம் வூட்டுக்குக் கரன்ட் இழுத்திடனும்.