பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 43 கிளியந்துறைக் கடை வீதிக்கு அருகிலேயே ஆற்றுக்கப்பாலுள்ள விவசாயத் தொழிலாளர் குடியிருப்பில் இருப்பவள். இந்த வட்டகை மாதர் அணியின் தலைவி. எட்டாவது படித்திருக் கிறாள். துணிச்சலாகப் பேசி நடப்பவள். 'லட்சுமியக்கா! வாங்க, தலைவருக்கு உடம்புக்கென்ன? டவுனுக்குப் போனாங்களாம்?" "ஒடம்புக்கொண்ணில்ல, காலுல எதோ முள்ளு குத்தியோ கல்லு குத்தியோ வீங்கிருக்கு. நடக்கக் கஷ்டப்படுறாரு...” "செத்த மின்னதா பஞ்சாமி சொல்லிச்சி, ஐயனார் கொளத்துல பொனங்கொண்டு போவ எடங்குடுக்க மாட்டேன் னிட்டாராமே பிச்சமுத்து மணியாரர்? நேத்தென்னமோ தலைவர் வந்ததும் போராட்டம்ன்னாவ, அப்புறம் அங்கியே குழிச்சி மூடிட்டாவளாம்...” "பத்துப் பேரா படலயப் பிச்செறிஞ்சிட்டுப் போங்கடான் னாரே?” "அதெப்படி? அவனுவ ஆளுவ சும்மா விட்டுடுவாங்களா? வெட்டுகுத்தல்ல வரும்!...” "மின்ன அந்த வழியா நடந்திட்டுத்தா இருந்தாங்க. இப்ப அந்தச் செட்டியாரு வித்திட்டுப்போக, இவங்க வாங்கின பெறகுதா படலயப் போட்டு மறச்சிட்டா.” "இல்லக்கா, அப்ப தரிசா இருந்திச்சாமே? இப்பதானே அல்லாம் உழுது நாத்து நட்டுவச்சிருக்கா? மின்னியே சங்கத்தில சொல்லி பிடிசன் குடுத்ததுதா? இப்ப போராடணும்னு சாம்பாரு முனப்பா பேசிட்டிருக்காரு.” "போராட்டம்தா. பொழுதுக்கும் எந்திரிச்சிப் படுக்கற வரய்க்கும் பொழப்பு மிச்சூடும்.” "பின்ன என்ன செய்யிறது? அங்காடில குடும்பக்கார்டுக்கு ஒண்ணுவிட்டொரு நாளு ஒண்றக்கிலோ ரேஷன் அரிசி போடுறான். எட்டு வவுறு சாப்பிடப் பத்துமா? தாசில்தாராபிசுக்கு மு ன்ன ஆர்ப்பாட்டம் பண்ணுங்கங்கறாங்க. அல்லா ஆம்பிளையும் இத குடிச்சிட்டு வந்து சோத்துக்குக் குந்திக்குவான். கொஞ்சுண்டு வச்சாப் பத்துமா?...” லட்சுமிக்கு நிற்க நேரமில்லை. கந்தசாமியின் கடையில் கூட்டத்தில் நின்று சோம்பு, பூண்டு, புளி, குப்பியில் எண்ணெய் என்று வாங்கிக்கொண்டு திரும்புகையில் ஒரு போர் அங்கே