பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 45 'சரி சரி, உங்கய்யாகிட்ட ஒண்னுஞ்சொல்லாதே, ஏற்கெனவே கோவிச்சிட்டிருக்காரு.” சோற்றைச் சரித்து வைத்துவிட்டுக் காந்தி படுத்துக் கிடக்கிறாள். லட்சுமி மசாலைப் பொருள்களை எடுத்து வைத்துச் சிம்னி விளக்குடன் வெளியே கிடக்கும் அம்மியில் அரைக்க உட்காருகிறாள். - அம்சு குடத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். "எங்கடி? தண்ணி இருக்கே?" "போம்மா, மேலெல்லாம் மண்ணு, குளிக்கணும்." “எந்நேரண்டி நீ குளிக்கிறது, இருட்டில ஆத்துக்குப் போயி?” "கொளத்துல வெளக்கு வெளிச்சம் இருக்கும்மா!' "குளிக்க வானாம், இப்ப நீ உள்ளற போ! ஈரமா இருந்தா சீலய அவுத்து மாத்திக்க புளியக் கரைச்சி வையி. இப்ப தாத்தா சத்தம்போடும்.” அம்சு தனது விருப்பத்தை நிலைநாட்டிக்கொள்ள அடம்பிடிக்க மாட்டாள். செல்லுபடியாகாது என்றால் மறந்து விடுவாள். உடனே குடத்தை வைத்துவிட்டுப் போகிறாள். "ஏம்மா, வெறும் காரக் குளம்பா? மீனு வாங்கியாரலி (Ly Fr?” "கைக்காக இதுக்கே சரியாப் போச்சி. எட்டனா புளி ஒரு நாத்தா வருது.” வாசலில் யாரோ திமுதிமுவென்று வரும் ஒசைகள். "கூப்பிடுடா உங்க தலவர!...” கபீரென்கிறது. இரட்டைக் குரல், அந்த மூலை ரங்கனின் பயல் மாதிரி கேட்கிறது. கூடவே சாம்பாரின் அபய ஒலி. "வாய்க்காரே!... வடிவ டேசனுக்கு இட்டுப் போயிட்டானுவ, வாய்க்காரே..!" அரைத்த குழவி நிற்கிறது. அம்சு திகைத்து விழிக்கிறாள். சம்முகம் எழுந்திருக்க முடியாமல் எழுந்திருக்கிறார். காந்திக்கு ஒரே வெறுப்பாக இருக்கிறது. "அந்தப்பய ரோட்டிலே நின்னவ மேல அழுக்குத் தண்ணிய ஊத்திச் சண்டக்கி இழுத்தா வாய்க்காரே."