பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 o சேற்றில் மனிதர்கள் நோகிறது என்று காட்டத் தெரியாத இது நீண்ட ஆயுளோடு இந்த விட்டில் பற்றிக்கொண்டிருக்கிறது. நினைப்பிலேயே கண்கள் கசிந்து எரிச்சலாகக் கனிகின்றன. தாழ்வாரத்திலேயே வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் படுத்துக்கிடந்து விடியற்காலையின் குளிர்ச்சியிலேயே சற்றே கண்ணயருகிறாள். * + அம்சு சானம் தெளிசிகும ஒசையில்தான் விழிப்பு வருகிறது. கோழிக்கூண்டைத் திறந்தி விட்டுவிட்டுக் கிழவி, "ஏண்டி இங்கு படுத்திட்ட? புள்ளக்கிக் காவலா?” என்று கேட்டுவிட்டுப் போகிறாள். கிழவி எப்போதும் பேசமாட்டாள் எப்போதேனும் அறியாததுபோல் ஒரு சொல்னி? உதிர்ப்பாள். அது திராவகச் சொட்டாக இருக்கும். "லட்சுமி. சுடுதண்ணி வச்சிக் குடேன்? வாயெல்லாம் கசக்குது." 'காச்சலடிச்சிருக்குது. இன்னிக்கு எங்கும் போகாம படுத்திருங்க காலுக்கு மஞ்சள்" அரச்சிப் பத்துப் போடுறன்." எழுந்து இயற்கைக் கடன் கழிக்கச் செல்வதுகூடச் சிரமமாக இருக்கிறது. பின் தாழ்வரையில் நாகு குந்திக் கொண்டிருக்கிறான். சம்முகம் படியில் அமர்ந்து அம்சு கொண்டுவந்து கொடுத்த சுடுநீரால் முகம் கழுவுகிறார். ஆற்றுக்கரை மேட்டிலி ருந்து பையன் சைக்கிளில் இறங்சி வருகிறான். அவன் மட்டுமல்ல, தொப்பி முடியும், பெரிய மூக்குக் கண்ணாடியும் பாம்புத் தோல் மினுமினுப்பாகச் சட்டையுமா?" ஆறுமுகத்தின் பயல், முதல் நாள் விசுவநாதன் வீட்டுக்கு வந்தானே, ஸ்டா லினோ, புல்கானினோ அந்தப் பயல்தான் சைக்கிளைப் பின்புறமே நிறுத்துகின்றனர். படலையைத் தள்ளிக்கொண்டு பையன் நண்பரி" அறிமுகப்படுத்துவதுபோல் நிற்கிறான். - வணக்கம். என்று நண்பன் புன்னகை செய்து கை குவிக்கிறான். சம்முகம் நிமிர்ந்து பார்த்துவிட்டு வாய் நீரை உமிழ்கிறார் வேகமாக.