பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 51 "கொல்லையில ஏண்டா வந்து நிக்கிறிங்க?' o எரிச்சலில் மேலும் மேலும் நீரை ஊற்றிக் கொப்புளிக் கிறார். "உள்ள வாங்க, சாலி...' சுற்றி வந்து திண்ணையில் நண்பனை உட்காரச் சொல் கிறான் கோபு. - * காந்தி திடுக்கிட்டாற்போல் எழுந்து கதவண்டை எட்டிப் பார்த்துவிட்டு உடனே உள்ளே மறைகிறாள். எதிர்த்திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான் பாட்டன். "யார்ரால அது?” "...உங்க சிநேகிதர் மகன்தா தாத்தா, வெட்டுகுடி ஆறுமுகம்" "ஆருமவன்?. ஆருமுகமா?. அவந் துரோகிப் பயல்ல? உண்ட வூட்டுக்குத் துரோகம் பண்ண பன்னிப்பய.” கிழவன் இந்த வரிசையை உதிர்த்த கையோடு சிரிக்கிறான். கசப்பின் இறுதியில் அசட்டுத் தித்திப்பும் அருவருப்பாகிறது. "டோன்ட் மைன்ட் பிரதர். எங்க தாத்தா எப்பவும் யாரையும் துரோகிப்பயன்னுதா சொல்வாரு அப்பதா அவருக்கு திங்கிற சோறு செமிக்கும்.” அவன் உள்ளே செல்கையில் காந்தி முகம் கழுவி புருவங்களுக்கிடையில் கவனமாகப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறாள். லட்சுமி கிழவருக்கு நீராகாரம் கலக்குகிறாள். "யம்மா, கொஞ்சம் காபி வச்சிக் கொண்டா!' "காபி. ஏ.ண்டா, இதென்ன கவுனர் வீடுன்னு நினைப்பா? ஐயா கெடந்து அல்லாடிட்டிருக்காரு. சைக்கிள் வச்சிருக்கேல்ல? கடைப்பக்கம் போயி ரெண்டு பன்னு வாங்கிட்டுவா. ராத்திரியே அவுரு வவுத்துக்கொண்ணும் திங்கல.” "என்னம்மா நீ, நேரம் காலம் தெரியாம! வந்திருக்கிறவங்க யாருன்னு தெரியுமில்ல! நம்மூட்டுக்கு வரக்கூடிய ஆளில்ல; கொஞ்சம் கவுரதியா நடக்கவானாமா? ஏ, காந்தி, நீதா கொஞ்சம் காபி வச்சுக்கொண்டா!' "பாலில்லாமயா? அம்சு கொடியான் வீட்டில போயி கொஞ்சம் பாலு வாங்கிட்டு வா!' காந்தி கவனித்துக்கொள்வாள் என்ற திருப்தியுடன் கோபு வாசலில் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.