பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சேற்றில் மனிதர்கள் "இந்தத் திண்னய எக்ஸ்டென்ட் பண்ணி சிமின்ட் போடணும்னு. எங்க தாத்தாதா முட்டுக்கட்டை, இவருக்கு அந்தக் காலத்துல எப்பிடி இருந்தாங்களோ அப்படியே இருக்கணும். இதப்பாருங்க இப்பவும் நீராரம் தான் குடிப்பாரு." "காபி வச்சிட்டா ஒரே ரகள. நேத்து காபிதானிருந்திச்சி. சண்டபோட்டு ஆரு வீட்டேந்தேனும் வாங்கிட்டு வரச்சொல்லி அடம்புடுச்சாரு எப்படி இந்த மனுசங்கள வச்சிட்டு முன்னுக்கு வரது?” "ஒல்ட் பீப்பிளே இப்படித்தான். நீ இதுக்காக பாதர் பண்ணிக்காத பிரதர்.” காந்தி அப்போது நிலைப்படியில் வந்து நிற்கிறாள். “வணக்கம்...” "இதாம் பிரதர் எபிஸ்டர், நா சொல்லியிருந்தேனே?” "ஒ, இவங்கள நான் பார்த்தேனே?. உக்காருங்க.." என்று சாலி மரியாதையாக அவளை உபசரிக்கிறான். 'நீங்க ஒருத்தர் இங்க படிச்சி முன்னுக்கு வர ஆர்வமாயிருக்கிறது ரொம்பப் பாராட்டத்தக்கது. வாய்ப்பைப் பயன்படுத்திட்டு முன்னேறத் துடிக்கிறவங்க உங்களைப் போல ஒருசில பேருதான்.” "ரொம்ப தாங்க்ஸ், உங்க பாராட்டுக்கு. ஆனா. சொல்லவே கஷ்டமாயிருக்கு. இப்பகூட, டெக்னிகல் கோர்ஸ் படிக்கலான்னு இன்டர் வியூ போனேன். ரெண்டாயிரம் டொனேஷன் கேக்கிறாங்க...' "ஆமா, அவங்களுக்கும் புது இன்ஸ் டிட்யூஷன்: எக்ஸ்பான்ட் பண்ணனுமில்ல? டொனேஷன் வாங்கியாக வேண்டியிருக்கு. ஆனா, இப்ப அதெல்லாம் கஷ்டமில்ல. பணம் வங்கிலகூடக் கிடைக்கும். என் ஃபிரன்ட் ஒருத்தனுக்கு ஃபாரின் போகவே நா பத்தாயிரம் ஏற்பாடு செஞ்சி குடுத்தேன்.” சட்டைக்காலரைத் துக்கிவிட்டுக்கொண்டு பாட்டனை யும், பாட்டியையும், பிறகு தெருவில் நடவுக்குச் செல்லும் பெண்களையும் பார்த்துக் கொள்கிறான் சாலி. காந்திக்கு முகமெல்லாம் ஆவலாகப் பளபளக்கிறது. 'பாங்க்ல இதுக்கு லோன் கிடைக்குமாங்க?" “உங்களுக்குப் பணம் கிடைக்கும். ஆனா எனக்கு. ஒரு சின்ன யோசன. உங்களப்போல லேடீஸ்ங்க, பி.ஏ., எம்.ஏ.,ன்னு