பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சேற்றில் மனிதர்கள் கால்வாய்க்கு நீர் பாயும் மதகுச் சுவரில்தான் பாட்டி தங்கம்மா எரிமுட்டை தட்டுவாள். அந்த இடம் அவளுக்குக் குத்தகை. அங்கிருந்தபடியே வீட்டையும் ஒரு கண்பார்த்துக் கொள்ளலாம். வெயில் உறைக்காததால் முதல் நாளைய வறட்டிகளைப் பெயர்த்துக் காய வைத்துக்கொண்டு அங்கேயே உட்கார்ந் திருக்கையில் காந்தி சோப்புப் பெட்டியுடன் ஆற்றில் குளிக்க இறங்குகிறாள். "ஐயா என்ன செய்யிறார்டி?” "படுத்திருக்காரு." "சோறு வடிச்சி வச்சிட்டே?” "வச்சாச்சு கொளம்பொண்ணும் இப்ப வக்கவானான்னு அம்மா சொல்லிட்டுத்தாம் போச்சி." "அந்தப் பய எங்க?...” "அதோ கோடில புள்ளங்ககூட ஆடிட்டிருக்கிறான்." கிழவி ஏதோ நினைவாகச் சூனியத்தை வெறிக்கிறாள். என்ன சோப்போ, அது துரையே வரவில்லை. இவளுக்கு இருக்கும் சேலைகள் நைலக்ஸ் இரண்டுதான். ஒன்று பொங்கல் சமயத்தில் வாங்கியது. ஆற்று வண்டல் கலங்கிவரும் கலர். அவளுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் மூட்டைக்காரன் இதைக் கொண்டுவந்து நன்றாக இருக்கும் என்று சொல்லித் தலையில் கட்டடவிட்டான். ஆற்றுக் கலங்கல் நிறத்தில் சிறுசிறு நீலப்பூக்கள் போட்டிருந்தன. ஆனால் அந்த நீலம் கூர்மை இழந்து தேக்கத்தில் பாசி பூத்தாற்போல் அசிங்கமாகிவிட்டது. இந்தச் சேலையைத் தான் அன்று உடுத்திச் சென்றாள். சனியன், இதற்கு அதிர்ஷ்டமே இல்லை. அந்த இன்னொரு பச்சைச் சேலையை உடுத்திச் சென்றிருந்தால், அவள் வாழ்க்கை ஒருகால் நம்பிக்கை மிகுந்ததாயிருக்கும். வீட்டுக்கு வந்த ஆளை இப்படி விரட்டலாமா? ஆத்திரத்தைத் துணியில் காட்டுகிறாள். நைலக்ஸ் புஸ் புஸ்ஸென்று காற்றை அடக்கிக்கொண்டு அடங்காமல் சண்டித்தனம் செய்கிறது. அம்சு வெள்ளித் துரக்கை எடுத்துக்கொண்டு காலையில் நடவென்று கிளம்பி விடுகிறாள். அம்மாவும் சென்றுவிடுவாள். அம்சுவுக்குக் கையில் காசும் சேருகிறது. ஆனால் இவள்