பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 59 தடியை ஊன்றிக்கொண்டு பாட்டன் படியேறுகிறான். கைத்துணியில் ஈரமாக மீன் தெரிகிறது. நேராகச் சமையலறைக்குள் வந்து "ஏ செவப்பி, இந்தாட்டீ, தேச்சுக் களுவி, உப்பு, மொளவா தடவி, சட்டில போட்டு.” பதம் சொல்லி அவளிடம் கொடுக்கிறார். கண்களைச் சரித்துக்கொண்டு பார்க்கிறார் "யார்ராது? பக்கிரிமவன் பொன்னுவா? ஏண்டால, ஆளயே காணம்? உன்னண்ட நாஞ் சொன்னது என்னாச்சி?” "என்ன சொன்னிய தாத்தா?” “ஏண்டா, எத்தினி தபா நாகப்பட்டணம், காரக்கால் போறிய? இங்க இந்தப் பயலுவ, இன்னாமோ பொடியப் போட்டுத் தண்ணிய ஊத்திக் கலக்குறான். புஸ்ஸ"னு துர வருது. அத்த அஞ்சு லிட்டருக்கு அஞ்சு லிட்டர்னு கலந்து விக்கிறானுவ. குடிச்சா ஒடம்புக்குத் தெம்பால்ல சூர் புடிக்கணும்? இதெளவு சாஞ்சாடிட்டுத் துக்கம் மயக்குது. சேய்! நாகபட்ணம் காரக்கால் போனா சீமப்பிராந்தி வாங்கிட்டு வாடான்னு நீ வாரபோ தெல்லாம் சொல்றேன். வெத்துக்கையா வார. ஏதோ கெளவன், கேக்குறானேன்னு கூட இல்ல!” "தாத்தா, போலீசுக்காரன் வெலங்கு போட்டுக் கூட்டிட்டுப் போயிருவான்!” "அட. சி, போடா, சால்ஜாப்புச் சொல்ற? இப்பதா அல்லாம் பப்ளிக்கா எடுத்து எங்க பார்த்தாலும் கடதுறந்திருக் காங்க? இதா வீரமங்கலம், அஸ்த மங்கலம், குமட்டுரு எங்க பாத்தாலும் கீத்துக் கொட்டா போட்டுத் துறந்து வச்சிருக்கானு வளே? நீ எனக்குப் போலீசு மயிருன்னு காதுகுத்துற?” "அதில்ல தாத்தா. உள்நாட்டுச் சரக்குக் குடிச்சா விலக்கில்ல. நீங்க சொல்ற சரக்கெல்லாம் வாங்கியாரக் கூடாது.”

  • 'மயிரு எல்லா நாள்ளயும் நாங் குடிச்சிட்டுத்தா வாரனா. எத்தினியோ கண்டம் பொழச்சி உசிர வச்சிட்டிருக்கிற என்னிக் கின்னாலும் கொஞ்சம் ஊத்தி நல்லதாக் குடிச்சிக்கலாமேன்னு." "அப்ப, இதுக்குத்தா உசிரோட இருக்கீங்களா தாத்தா?” "பின்னென்னல? இதபாரு, மண்ணு, பாசி எப்பிடிச் சதயத் திண்ணிருக்கின்னு!”

கிழவனார் தேய்ந்து சுக்காகிப் பாளமாக வெடித்துப்போன தன் குதிகாலைக் காட்டுகிறார்.