பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 63 செத்ததும் மிராசுதாரு, அந்தப் பொம்பிளகளுக்கு தலா ஆயிர ரூபா குடுத்தாராம். ஆனா? அவளுவ சொன்னாளுவளாம், நாயத்துக்குப் போராடுறவங்க அவுங்க. இவங்க இப்ப அடியாளா போறப்பவே நாங்க வாக்கரிசி போட்டுத்தா அனுப்பிச்சம்னு போயிட்டாவளாம். காசக்கூட வாங்கிக்கலியாம். அப்புடி அது உணுமயில நாயத்துக்கான யுத்தம்தா. ஆனா எதிராளிய தருமமா நடக்கல. போலீசு தருமமா பாக்கல. சரளக்கல்லப் போட்டு முட்டிக்கால் போட்டு வரச்சொல்லி அடிப்பானுவ... பொம்பிளகள. எப்பிடிச் சொல்றது? தலைப்பய! மண்ணையும் தண்ணிரையும் குழச்சி அப்பப்ப வித்துணி உசிர்ப்பச்சை கண்டு வளத்து மணியாக்கி வயித்துப் பசி தீர்க்கிற தொழிலச் செய்யிறவன் சேத்துலதான் உழண்டிட்டிருக்கிறான். ஆனா மனசொப்பி அந்தப் பயிரயே அழிக்கமாட்டான். சுமையா இருக்குதுன்னு மனுச உயிர அழிப்பானா? செம. அநியாயக்கார வச்ச செமயக் கூடச் செமக்கிறம்.” சம்முகத்துக்கு உடல் சிலிர்க்கிறது. பொன்னடியான் உள்ளிருந்து வரும் மீன் வறுக்கும் மனத்தில் மூழ்கி உள்ளேயே பார்வையைச் செலுத்துகிறான். “காந்தியக்க்ா? காந்தியக்கா?...' காத்தானின் மகள் பொன்னி இடுப்புக் குழந்தையுடன் கூவுகிறது. "த பாரு, நாவு எங்கமேலல்லாம் மண்னெடுத்துப் போடுறான்.” “காந்தி, போயி அந்தப் பயலக் கூட்டிட்டுவா. போ, FF போ. சம்முகம் அந்தப் பையனால் மற்றவருக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற உணர்வுடன் கண்டிப்பாக இருப்பார். "ஏன் காம்ரேட் இவனுக்கு வயித்தியம் ஏதும் பண்ணல." “...எங்கப்பா?... அப்பல்லாம் நான்தான் ஒடிட்டே இருந்தேன். பொம்பிள, பிள்ளயப் புளிய மரத்தடில கிடத்திட்டு வேலை செய்யிவா. நாலு வருசம் வரயிலும் கவனிக்கல. பிறகும்கூட, மரத்தடிலே அந்த தோசம் இந்தக் காத்துன்னு ஏதோ சொல்லிட்டிருந்தாங்க. ராவில அப்பல்லாம் ஊளயிடு வான். அப்புறம் புதுக்குடி டாக்டர்ட்ட கேட்டம். ஒண்னும் பண்ண முடியாதுன்னுதா சொல்லிட்டாரு, என்ன செய்யிறது?"