பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சேற்றில் மனிதர்கள் "அதில்ல காம்ரேட், இப்ப ஊனமுற்றோர் ஆண்டில் எதனாலும். பாக்கலாமுல்ல...” "என்னத்தப் பாக்கிறது? ஊனமில்லாதவங்க வசதிக்கே பாக்க முடியல...” காந்தி ஆத்திரத்துடன் அழுக்கும் மண்ணுமான நாகுவை இழுத்துக்கொண்டு வந்து திண்ணையில் அதட்டி உட்கார வைக்கிறாள். பிறகு அவர்களுக்குச் சோறுபோடச் செல்கிறாள். தட்டுக்களில் சோறு முதல் நாளின் குழம்பும் போட்டு மீன் கறியும் வைத்து மூவரிடமும் கொண்டு வருமுன் பொன்னடியான் எழுந்து தானே வாங்கி வைக்கிறான். "உனக்குத் தொந்தரவு...” காந்தி இந்த உபசாரத்துக்கு எந்த எதிரொலியும் காட்டவில்லை. "காம்ரேட், இன்டர்வியூக்குப் போனதாச் சொன்னாங்க, பனங்கட்டியாச்சா?” "அந்த வயித்தெரிச்சல ஏங்கேக்கிற? ரெண்டாயிரம் ரூபாக்கி எங்கே போக...?” "அதா, ரெண்டொரு எடத்தில் இப்பிடி டொனேசன் வாங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். கம்மா கண் துடைப்பு, தாழ்த்தப்பட்டவர்ங்கறதெல்லான்னு. நமக்குத் தெரிஞ்ச ஒராள் இருக்காரு நம்ம எஸ்.என். இருக்காரில்ல, அவர் மாமா. நெல்லு வியாபாரம். இப்பிடின்னா, ரொம்பக் கொறஞ்ச வட்டிக்குக் குடுக்கிறாரு இப்ப, இந்த மாதிரி டொனேசன் வாங்குறாங்கறத அம்பலப்படுத்தி உடக்கணுமின்னாக்கூடக் குடுத்திட்டுத்தா அத்தாட்சி காட்டணும். நா சொல்லி வைக்கிறேன். இன்னிக்குத் தேதி எட்டில்ல. பன்னண்டாந்தேதி போல நீங்க சங்கத்து ஆபீசுக்கு வந்தீங்கன்னா வந்து கூட்டிட்டுப் போறேன்." "கடன் வாங்கிட்டா அடய்க்கணுமில்ல. இப்பத்தோணுது. பிறகு இவ வேலைக்கி இதுமாதிரி பணம் குடுக்கணும்னா எங்க போக? பெரிய பையன் உதவாம போயிட்டான். மூணு வருசம் படிக்கனும், அதுவரய்க்கும் சின்னவளையும் கட்டிக்குடுக்காம வச்சிருக்கிறதா? உங்கிட்ட சொல்றதில என்னப்பா? பிரச்சனை ஒண்ணோட போறதில்லை.” "நீங்க அவநம்பிக்கையே பட்டிருந்தா எப்பிடிப்பா? நான்