பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ சேற்றில் மனிதர்கள் ஒர் இரகசியச் சேதியை அலைகளாக்கிக்கொண்டு செல்கிறது. "பாத்துக்கடி...! என்ன தயிரியம்?...” "தயிரியம் என்ன! நாத்துக்கட்ட இன்னக்கி வாங்கினா நாளக்கிப் புள்ளய வாங்கிக்கறா..." மறுபடியும் ஒரு குபிர்ச் சிரிப்பொலி. சேற்றுக் குழம்பில் வண்ண மலர்க் கைகள் பச்சைப் புள்ளிகளை வைத்துப் பூமியன்னைக்குப் பசும் பட்டாடை உடுத்துகிறார்கள். இதற்குப் பிரதிபலனாக அம்மை பொன்மணி களாய் நெல் மணிகளைக் கொண்டு வந்து குவிப்பாள். குடிசை இருட்டுக்குள் இல்லாமை, இருப்பு, புருசனிடம் சிறுமை, பெண்ணாய்ப் பிறந்துவிட்டதன் பொறுப்பினால் விழும் சுமைகள், வெளிக்குக் காட்டமுடியாத வேதனைகள் எல்லாம் குமைந்தாலும், இந்த வெட்டவெளியில் விரிந்த பசுமையில், அந்தத் தளைகள் கட்டறுத்துக் கொண்டு போகின்றன. லட்சுமி ஒரமாக நாற்றுப் பதிய வைத்துக்கொண்டு போகிறாள். இது அவர்கள் சொந்த மண். ஐயர் பூமியில் தாளடி நட வேண்டும் என்று முன்னதாகவே தண்ணிர் வருவதற்கு முன் பம்ப் வைத்து நீர் இற்ைத்து நடவு முடித்திருக்கிறார்கள். இதுவும் குறுவைப் பயிர்தான். மழை வந்து கெடுக்காமல் நல்ல படியாக விளைவெடுத்தால் உடனே அடுத்த பயிரையும் வைக்கலாம். "ஒ." என்று சாம்பாரின் பெண்சாதி மாரியம்மா பாடக் குரலெடுக்கிறாள். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் அடிபட்டு, கண் குழிந்து கன்னங்கள் தேய்ந்து, முடிகொழிந்து அவளை உருமாற்றிவிட்டாலும், குரலின் வளமை அப்படியே இருக்கிறது. தேம்பாகு விழுவதுபோல் தொய்யாமல் துவளாமல் அந்த வெட்டவெளியைத் தனக்கென்று சொந்தமாக்கிக் கொள்ளும் குரல். - "ஒ. ஒ. தங்கத்தால் வீடு கட்டி.." இவள் முறை வைத்ததும் அத்தனை குரல்களும் சேர்ந்து தங்கத்தால் வீடு கட்டுகின்றன. "தங்கத்தால் தொட்டி கட்டீ. அங்கே தங்கக்கிளி பாடுதய்யா...” குரல் வானவெளியிலே தங்கக் கிளிகளைப் பறக்கச் செய்கின்றன. "வெள்ளியால வீடு கட்டி. வெள்ளியால தொட்டி கட்டீ. அங்கே