பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 67 g" வெள்ளிக்கிளி களிக்குதையா...' #. இந்தக் குரலின் அலைகள் நெளிந்து மின்னி நீண்டு ஒயும்போது சோகம் இழையும் தனிமையைக் கோடாக்கு கையில் வண்ண வண்ணமாய்ப் பூவாய்ப் பசுமையாய் பாவாடையும் தாவணியும் பின்னல்களும் கூந்தல் நெளி பூசிகளும் பொட்டும் வளையல்களுமாக அந்தச் சேற்றில் பசுமை நாற்றுக்களுடன் பூப்பூவாய்க் கொஞ்சும் விரல்களில், அது இசையவில்லை. கு.பி ரென்று மடலவிழ்ந்த தாழை மணமாகச் சிரிப்பொலி பரவுகிறது. - சளக் சளக் கென்று சேற்றில் கால்கள் உறவாட, டப்டிப்பென்று சேற்றுத்துளிகள் மேல் தெளிக்க, நாற்றுக் கட்டுக்கள் வந்துவிழ, பரிகாசங்கள் கலக்க. அந்த இன்பலயத்தில் குத்தலும் கூடப் பாயாது என்னாடி சிரிப்பு, நெளிப்பு?' என்று லட்சுமியின் அதட்டலுக்கு ஒரு பவிசும் இல்லை. "தங்கத்தால தொட்டிகட்டி, வெள்ளித் தொட்டிகட்டி, பகளத்தாலே தொட்டி கட்டின்னு இந்தாயா இழுத்துக்கிட்டே இருக்காங்க அல்லாம் கட்டி, கிளியும் குஞ்சமும் தொங்கவுடனும் பேரப்புள்ளய எப்பப்போட்டு ஆட்டுறது?” என்று சொல்லி க் கேட்டுவிட்டு அம்சுவைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள். "அதுக்கு மொதலாளி அம்மா தயவு வைக்கணுமில்லே...?” வடிவு மீசையைப் பல்லில் இழுத்துக்கொண்டு மெதுவாக உதிர்க்கும் பூக்கள், வானத்து இறுக்கம் தளர்ந்து பன்னிர் விசிறும் காற்று மெல்ல நீர்பரப்பைச் சிலிர்க்கச் செய்கிறது. அம்சுவின் மொழுமொழுத்த கையில் பச்சையும் சிவப்புமாக வளையல்கள். லட்சுமியின் கண்கள் அங்கேயே நிலைக்கின்றன. பதியப்பதிய வளையல்கள். இவளுக்கு எத்தனை நாட்களானாலும் என்ன வேலை செய்தாலும் வளையல்கள் உடையா. பழைய வளையல்களைக் கழற்றித்தான் புதியவை அணியவேண்டும். ஆனால் காந்திக்கோ, முண்டுக்கை, இரண்டு வளை ஏற்ற நான்கு வளைகள் உடைக்கவேண்டும். துணி துவைத்தால் உடையும், மாவாட்டினால் உடையும், அடுக்கி நான்கு நாட்கள் தங்காத লোক এক, * அம்சுவின் நாற்றுகள் பதியவில்லை. "யாரடிவ? மேத் தண்ணில மெதக் குது? அம்மாடி பொண்டுவளா? ஒளுங்கா ஊனிவையுங்கடி சினிமால்ல!” லட்சுமியின் காலில் அம்சு புரிந்து கொள்கிறாள்.