பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 77 கேட்கவேண்டும். யார் கொடுப்பார்கள்! பழைய வேம்பு ஒன்று ஐயர் நிலத்தில் இருக்கிறது. அதை வெட்டி ஒரு வண்டி செய்து வைத்துக்கொண்டால் மிக உதவியாக இருக்கும். ஆனால் எத்தனையோ எண்ணங்களைப் போன்று அதுவும் முதிர்ந்து பலன்கொடுக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் மங்குகிறது. | அன்றுமாலை விளக்குவைக்கும் நேரம், லட்சுமி சாமான் வாங்கக் கடைக்குச் சென்றிருக்கிறாள். காந்தி திண்ணையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். வெள்ளையாக இருட்டில் தெரிகிறது. அந்த நேரத்தில் குடித்துவிட்டு வரும் ஆண்களில் யாரும்அத்தனை வெள்ளைத் துணிக்குரியவராக இருக்கமாட்டார்கள். ஏதோ ஒர் ஆர்வத்தில் உந்தப்பட்டவளாகக் காந்தி எழுந்து வாயிலில் வந்து நிற்கிறாள். "ஏம்மா, காந்தி? சம்முகம் இருக்கிறானா?” - "இருக்காரு. அப்பா!' என்று உள்ளே நோக்கிக் காந்தி மெதுவாகக் குரல் கொடுக்கிறாள். "விருத்தாசலம் பிள்ளையும் மூலையாரும் வாராங்க...” சம்முகம் மெள்ள எழுந்திருக்கிறார். "வெளக்க ஏத்தி வாசல்ல வை” என்று கூறிவிட்டு வாயிலில் வந்து நின்று கை கூப்புகிறார். "வாங்க வாங்க." திண்ணையில் வந்து உட்காருகின்றனர். "என்னப்பா? ஒடம்புக்கென்ன?” காந்தி சுவரொட்டி விளக்கொன்றை ஏற்றிக்கொண்டு வந்து ஒரமாக வைக்கிறாள். "கால்ல முள் குத்தினாப்பல இருந்திச்சு. இப்ப என்னன்னே புரியல. குத்துவலி ஒரு வாரமா மஞ்சக் குழச்சிப் போட்டு, அந்தி மந்தாரை இலை, ஊமத்தை இலை கொண்டாந்து வாட்டிப் போட்டு, புளி குழச்சிக் காச்சிச் சூடா தேச்சி வச்சு எல்லாம் பாத்தாச்சி. பளுக்கவுமில்ல, உடையவுமில்ல." "அட? டாக்டரிட்ட யார்ட்டன்னாலும் காட்டக்கூடாது?" "அதான் வீரமங்கலம் போறதுன்னாலும் வண்டிவேனும், இங்கதா டாக்டர் யாருமில்ல. டவுனுக்குப் போயிக் காட்டலான்னாலும் வண்டியில்ல." "இது பாத்தா வாதக் கோளாறாட்டும்லா தோணுது?