பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 83 ஒழவுக்குப் போயிருக்கு இல்லாட்டி ஒரு வில்லங்கமும் இல்ல, தாரதுக்கு. இவனுக்கு ஒண்ணில்ல. மூலையாரு சொன்னாப்பல வாதக் கோளாறு, இது இப்பிடித்தா இழுத்தடிக்கும். இஞ்சிக்குடி வைத்தியரு ஒரு எண்ண வடிச்சிக் குடுப்பாரு. நான் சொல்லி அனுப்புறேன். அம்மனுக்கு வேண்டிக்க ஒரு கொறயும் வராது." "இவங்க படுத்திட்டதே ஒண்னும் ஒடலிங்க.." "ஒண்ணும் வராது. நான் சொல்றம் பாரு உங்கை ராசியான கை சம்முகம். முதல்ல உங்கையால பத்து ரூபா அம்மன் விழாவுக்குன்னு எளுதிக் குடு.” மூலையான் இத்தனை நேரமும் தயாராக வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தை நீட்டுகிறார். 'பத்து ரூபாயிங்களா?... என்னங்க அவ்வளவு போட்டுட்டீங்க?” சம்முகம் குழப்பத்தையும் எரிச்சலையும் காட்டாமல் சிரிக்கிறார். "பின்னென்னப்பா? சொந்தமா அஞ்சு மா வாங்கிட்ட, வீடு கட்டிட்டே, விவசாய சங்கத் தலைவன். புள்ள, பொண்ணு படிச்சு கவுரமாயிட்டிங்க. இதெல்லாம் அம்மன் குடுத்தது தான? பத்து வருசத்துக்கு, வருசத்துக்கு ஒரொரு ரூபாவச்சாக் கூட பத்து ரூபாதான்? நாயமா உன் அந்தசுக்கு நூறுருபா போடலாம். நா. கஷ்ட நஷ்டம் ஒனந்தவன். அதான் பத்தோட சம்முகம் நோட்டுப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவர் கொடுத்த பேனாவாலேயே பத்து ரூபாய் என்று எழுதியதற்கு நேராகக் கையெழுத்துப் போடுகிறார். "முதல்ல கடஞ்சொல்ல மாட்டே குடுத்திடுவேன்னுதா இங்க வந்தோம்.” சமூக மதிப்பைக் குறிப்பாக்கி உயர்த்தி வைக்கும்போது மனம் மயங்காமலே இருப்பதில்லை. லட்சுமி அவனைக் கேட்காமலே உள்ளிருந்து பத்து ரூபாய் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவர்களிருவரும் படியிறங்கிச் செல்கின்றனர். “காந்தி, நாகு எங்கடீ; அவம்பாட்டுல எங்கனாலும் போயிடப்போறான்!” லட்சுமிக்கு அவனைப் பற்றிய உணர்வு ஒரு நொடியில்