பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சேற்றில் மனிதர்கள் அது என்பதைத் தெரிவிக்கிறது. வயல்களிடையே செல்லும் கப்பிச் சாலையில் சென்றுதான் ஊருக்குள் வீட்டைக் கண்டுபிடிக்கவேண்டும். ஆறு முகம் என்றால் அங்கு தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவள் பள்ளியில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார். பாதையில் நடந்துசென்றதும் புராதனமான கோயிலும், குளமும் வருகின்றன. செம்மண் சுண்ணாம்புப் பட்டை அடிக்கப்பட்ட மதில் சுவர்கள். மேற்குலத்தார் வசிக்கும் வீடுகள். யாரிடமேனும் கேட்டால் சொல்வார்களாக இருக்கும். யாரிடமும் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது. மூட்டைகளை அடுக்கிக்கொண்டு சல்சல்லென்று ஒரு மாட்டுவண்டி வருகிறது. நின்று அவனைக் கேட்கலாம் என்று சற்று ஒதுங்குகிறாள். அவனிடம் கேட்கவே அவசியம் இல்லாதபடி, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வருகிறது. நெஞ்சு துடிக்க மறந்து போகிறது; அந்தக் காலையின் ஏறும் வெயிலில், தொப்பி போன்ற முடியும், கறுப்புக் கண்ணாடியுமாக சாலிதான். மோட்டார் சைக்கிள் அவளைக் கண்டதும் நிற்கிறது. 'அட நிசந்தானா? பொய்யில்லையே?” கவர்ச்சியாக ஒரு சிரிப்பு. அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. “வந்து அப்பாவப் பாத்திட்டுப் போலான்னு." "என்னால நம்ப முடியவில்லை. உங்கப்பா - எப்படிச் சம்மதிச்சாரு?” ". அவுரு சம்மதிச்சு வந்ததாச் சொல்லலியே நான்?" இளநகை அவள் இதழ்களில் எட்டிப் பார்க்கிறது. "சபாஷ். நா நீ தயிரியசாலின்னு நினைச்சேன். அது கணக்கு சரிதான்னு நிரூபிச்சிட்ட." = "அப்பா வீட்ல இருக்காரில்ல?” ஒரு கணம் சூரியனின் வெளிச்சம் குன்றுகிறது. "இல்லியே? நாகபட்ணம் போயிருக்காரு." "அடடா. அப்ப. இப்ப பாக்க முடியாதா?” "முடியாதுன்னு ஆரு சொன்னது? நாகபட்ணம் போயி