பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சைவ இலக்கிய வரலாறு

-யாடுகிறது. அதனோடு உடன் செல்லும் பிடியானை தானும் விளையாடி அக்கன்றை இன்புறுத்துகின்றது. இதனைக் காணும் ஞானசம்பந்தர், "குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக், கன்றினொடு சென்றுபிடி நின்று விளையாடு காளத்திமலையே" [1] என்று பாடி மகிழ்கின்றார்.

இங்நிலப்பகுதியில் வாழ்பவருள், குறமகளிர் குறிஞ்சிப் பண்பாடி முருகனது பெருமையைப் பகர்கின்றனர்[2]. ஒருபால் அவர்கள் பரண்மேல் இருந்து புனத்திற் படியும் கிளிகளை ஒப்புகின்றனர்[3].." வயல்களில் கடைசியர்கள் பாடலும் விளையாட்டும் காணப்படுகின்றன.[4] மறையவர் மனைகளில், மகளிர், கழங்கும் பந்தும் அம்மானையும் ஆடும் போதும் இறைவன் புகழையே பாடுகின்றனர். [5] நிதியால் மிக்க செல்வர்கள் நித்தநியமங்கள் வழுவாது விதிமுறையே செய்து ஒழுகுகின்றார்கள்.[6]. செல்வமுடையவர்கள் ஈத்து வக்கும் இன்பத்தில் பேரீடுபாடு உடையராய், இன்மையால் போந்து தம்மை இரப்போர்க்கு வேண்டுவன ஈத்துமகிழும் செயலில் மிக்குவிளங்குகின்றனர்.[7]. கலைவல்ல புலவர்க்கும் [8]. கவிதைப்புலவர்க்கும்[9]. பெருங்கொடைபுரிவோர் பெருகியுள்ளனர். வேளாளர்கள் தாளாளர்களாய் வள்ளன்மை சிறந்து உள்ளனர்.[10].

சமய ஒழுகலாற்றுக் குறிப்புக்கள்

செல்வமனைகளில் கொடிகள் வானளாவ நின்று அழகு செய்கின்றன.[11]. தெருக்களில் அடியார் கூட்டம் இறைவன் புகழைப்பாடுகிறது.[12]. அரங்குகளில், மாதரும் மைந்தரும் பாலென மொழிந்து விளையாட்டயர்கின்றனர்.[13]. திருக்_


  1. ஞானசம்.327:10.
  2. ஞானசம். 12.10
  3. ஞானசம் 69:2.
  4. ஞானசம் 330:1
  5. ஞானசம்:129:2
  6. ஞானசம் 82:7
  7. ஞானசம் 178:9
  8. ஞானசம் 20:3
  9. ஞானசம் 102:1
  10. ஞானசம் 178:3
  11. ஞானசம் 237:1
  12. ஞானசம் 138:6
  13. ஞானசம் 8:9