பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சைவ இலக்கியவரலாறு


கருதுகின்றனர். இக் கல்வெட்டிற் கண்ட இசையும் தமிழ் இசையே எனப் பண்டைத் தமிழரது "யாழ் நூல்" கண்ட சுவாமி விபுலாநந்தர் [1] ஆராய்ந்து கண்டுள்ளார்.

திருப்பதிகப் பாட்டியலாராய்ச்சி

ஞானசம்பந்தர் பாடியுள்ள பாட்டுக்கள் யாவும் இசைத் தமிழ் வகையிலும் இயற்றமிழ் வகையிலும் அடங்குவனவாகும். இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய ஆராய்ச்சியாளர், "இசைத் தமிழ்ப் பாடல்களாகிய இத் தேவாரப் பதிகங்கள், இசைவகையில் செந்துறைப் பாவின்கண் அடங்குமாயினும், இசையோடு இயற்றமிழ்த் திறனும் நன்கு அமையப் பாடப்பெற்றன

வாதலின், இப்பாக்கள் இயற்பாக்களுள் எதன்பாற்படும் என நோக்குதலும் இன்றியமையாததே; இவற்றை விருத்தப்பா என்பர் சிலர்; அது பொருந்தாது. செந்தமிழ்ப் பாக்களெல்லாம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பெரும் பகுதியுள்ளும் மருட்பா, பரிபாடல் ஆகிய வகையினுள்ளும் அடங்குமென்பதே யன்றி அக்காலத்து விருத்தப்பா என ஒருபா வழங்கிய தென்றால் பண்டைய தமிழ் நூல் இலக்கணமாகிய தொல்காப்பியச் செய்யுளியலில் சொல்லப்படாது ஒழிதலானும், விருத்தம் என்னும் வடமொழிச் செய்யுளின்வகை அம்மொழியோடு பல்லாற்றானும் வேறுபட்ட நம் செந்தமிழ்ப் பாக்களுக்கு உரியதன்று ஆகலானும், இப்பொழுது விருத்தவகையுள் அடக்கப்படும் அருந்தமிழ்ப் பாக்களெல்லாம் எவ்வாற்றானும் அதனோடு இயையாது, பல்வகைச் சந்த வேறுபாடுடைய கலி முதலிய பாக்களுட்பட்டு அடங்கலானும், சந்த வேறுபாடு உடைய இத் தேவாரச் செந்தமிழ்ப் பாக்களெல்லாம் நம் தமிழ்க் கலியின் பாற்பட்டு அடங்குமாறு காண்க. ...திருமுறைகளாகிய தேவாரப் பதிகங்களைப் பல்வேறு சந்தங்கள் அமைய நயம்பெறப் பாடியருளிய ஞானசம்பந்தப்பிள்ளையார், தாம் சந்தக் கலிப்பாவினாலேயே மேற்படி


  1. யாழ் நூல்: பக் ஙளஙஅ.