பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

101

நம்பி[1] ஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளை[2] ஆணை நம தென்றபெருமாள்[3] என்பன சில பெயர்களாகும்.

இவ்வண்ணம், உலகியல் வழக்கில் திருஞான சம்பந்தர் பெயர் பயில வழங்கிற்றெனவே, அதனை வழங்கும் மக்கட்கும் அவர் பெயர் வழங்கியிருக்குமென்பது சொல்ல வேண்டா. அரசியல் தலைவர் பலர், திருஞான சம்பந்தப் பல்லவரையன்[4]' எனவும், திருஞான சம்பந்தமாராயன் [5] எனவும் காணப்படுகின்றனர். ஏனைமக்களுள், ஆண் மக்கள், சொக்க ஞானசம்பந்தன்[6] நம்பி சம்பந்தப் 'பெருமாள்[7] நல்ல ஞானசம்பந்தன்[8] செல்வ ஞான சம்பந்தன்[9] எம்பிரான் சம்பந்தன்[10] நக்கன் திருஞான சம்பந்தன்[11]' எனவும், ஞானசம்பந்தன்,[12] திருஞானசம்பந்த பண்டாரம்,[13] திருஞானசம்பந்தன் இராமநாதன்,[14]' கை காட்டுவான் கரும்பன் திருஞானசம்பந்தன்[15], சம்பந்தாண்டான்,[16] ஆண்டார் சம்பந்தப்பெருமாள்[17] திருஞான சம்பந்த வேளான்[18] ஞானசம்பந்தக் கோன்[19] எனவும், பெண்மக்கள் சிவஞான சம்பந்தத் தலைக்கோலி,[20] ஞான சம்பந்த நங்கை'[21] எனவும் பெயர் தாங்கி இருந்திருக்கின்றனர்.

அரசியல் தலைவருள் சிலர், மக்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றமைக்கு அறிகுறியாக இந்நாளில் ஊர்கள், நந்தவனங்கள், சிறப்புடைய கட்டிடங்கள் முதலியன



- .


  1. 1. A R. No. 606 of 1922.
  2. 2. A. R. No. 448 of 1912.
  3. 3. S. I. I. VoI. VIII. No. 442.
  4. 4. S. I. I. Vol. V. No. 984.
  5. 5. S. I. I. Vol. V. No. 483.
  6. 6. P. S. Ins. No. 310.
  7. 7. P. S. Ins. No. 317.
  8. 8. P. S. Irs. No. 481.
  9. 9. A. R. No. 465 of 1916; 358 of 1922.
  10. 10. A. R. No. 92 of 1920,
  11. 11. S. I. Ins. Vol. VIII. No. 50.
  12. 12. A. R. No. 292 of i927-8
  13. 13. 285 of 1916.
  14. 14, 102 of 1932-3.
  15. 15. 172 of 1934-5.
  16. 16. 92 of 1920; 384 of 1937-3.
  17. 17. S. I. I. Vol. VIII. No. 273.
  18. !8. ಕಿ: No. 83.
  19. 19. S. I. I. Vol. V., I, No. 35.
  20. 20. 231 of 32-3.
  21. 21. 34 of 1924.