பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

சைவ இலக்கிய வரலாறு

சம்பந்தர் திருமடம் ஒன்றுதான், தன்தொன்மைச்சிறப்பை உணர்த்திக் கொண்டு நிற்கிறது. தஞ்சை மாவட்டத்து மாயூரத்துக்கு அண்மையிலுள்ள தருமபுர ஆதீனமடம் திருஞான சம்பந்தர் பெயர்கொண்டு நிலவுவது ஈண்டுக் குறிக்கத்தக்க தொன்று.

திருக்கோயில்கள் தோறும் திருக்கை கோட்டியென ஒரு மக்கட்குழுவினை நிறுவி, அவர்கட்குத் திருஞான சம்பந்தர் முதலியோர் வழங்கிய திருப்பதிகங்களை இசையோடு கற்பித்து நாளும் வழிபாட்டுக் காலத்தில் ஒதுவதாகிய ஒருநெறி பல்லவ வேந்தர் காலமுதலே ஏற்படுத்தி இருந்தனர். உழைக்கும் திறனில்லாத குருடர்களும் மகளிரும் ஆடவரும் இத் திருப்பதிகங்களக் கற்று இசை நலங்கிளர எங்கும் இசைத்து வந்தனர். இவ்வகையால் மக்கள் மனத்தில் திருஞான சம்பந்தர் முதலியோருடைய திருப்பதிகங்கள் நன்கு பதிந்திருந்தன. அதனால், அவர் திருப்பதிகங்களிற் காணப்படும் பல இனிய சொற்ருெடர்களை வியந்தெடுத்துக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் கோயிலுக்கும் தெருக்களுக்கும் நிலங்களுக்கும் பெயராக அமைத்துப் பாராட்டும் வழக்கம் இடைக்கால நன் மக்களிடையே நிலவிற்று. திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்களக் கோயிற்சுவர்க் கல்லில் வெட்டி வைப்பதும்[1], சில கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தர் திருப்பதிகங்களுள் ஒன்றான "வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாட்டைக் கல்லிற் பொறிப்பதும்[2] செய்திருக்கின்றனர். தென்குடித் திட்டைத் திருப்பதிகத்தில் திருஞான சம்பந்தர், " ஐயுணர் வெய்தி மெய்தேறினார் வழிபடும் தென்குடித் திட்டை'[3] என்று பாடினாராக, பின் வந்தவர், மெய் தேறினார் தம் வழிபாட்டால் சிவமாந்தன்மை யெய்தும் சிறப்புக் கருதி அங்குள்ள இறைவனை, "தேறினார்' என்றே பெயரிட்டு வழங்கினர்; இதனை அவ்வூர்க் கோயில்


  1. 1. ATR. No. 8 of 1918.
  2. 2. A. R. No. 192 of 1928-9,
  3. 3. ஞானசம், 293 : 6,